அத்தியாயம் - 28

300 16 0
                                    

           வினய் மற்றும் சக்தி ப்ளைட் புறப்படும் அறிவிப்பு வர, புறப்பட்டனர். இருக்கையில் அமர்ந்த வினய்க்கும் சக்திக்கும் வாசுதேவன் நினைப்பே. ஆனால் எதுவும் செய்ய இயலவில்லை என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை. பின் இருவரும் பேச தொடங்கிவிட்டனர்.

சஞ்சனா வீட்டில்...
     சஞ்சனா வீட்டில் எல்லோரிடமும் வாயாடிக் கொண்டிருந்தாள். நீண்ட நாள் கழித்து தன் பெற்றோரை கண்டதில் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி.

     "அனு காலேஜ் லீவ்னா, நீயும் இங்கயே ஒரு வாரம் தங்களாமே", என்று சஞ்சனா கேட்டதும் "கரெக்ட் அக்கா... எனக்கும் லீவ் விட்டாச்சு... அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு நானும் ஒரு பத்து நாள் இங்கயே தங்கலாம்ன்னு தான் வந்திருக்கேன்... எப்புடி" என்று இல்லாத காலரை தூக்கிவிட்டாள் அனு. சஞ்சனா சிரித்தாள். இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த வினயின் தாய் லட்சுமி "அனு சஞ்சனா உனக்கு அக்கா இல்லடி... அண்ணின்னு கூப்பிடு...", என்றதும் அவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சியான மனநிலை சஞ்சனாவிற்கு நொடி பொழுதில் மாறிவிட்டது.

    பின் பெண்கள் எல்லோரும் சமைப்பதற்கு அடுக்களைக்குள் சென்றுவிட்டனர். சாப்பிட்டு பின் அனைவரும் ஓய்வெடுக்க சென்றுவிட்டனர்.

    மாலையில் ஹாலில் அமர்ந்து எல்லோரும் பேசிக்கொண்டிருக்க, உள்ளே வந்தார் வாசுதேவன். அவரை எல்லாரும் கேள்வியாக பார்த்தனர். அவர் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்று அறிந்து கொண்டனர். சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக கூறிவிட்டு தனதறைக்கு சென்றுவிட்டார் வாசுதேவன்.

      இரவு உணவு தயாரானதும் வாசுதேவனை சாப்பிட அழைத்தாள் சஞ்சனா. வேண்டாம் என்று மறுத்தவரை வம்படியாக இழுத்து சென்று அவர் சாப்பிட்ட பின்பே அங்கிருந்து நகர்ந்தாள்.

      வீட்டில் அனைவரும் என்னவாயிற்று என்று கேட்க... காலையில் நடந்ததை கூறினார்.

     விமான நிலையத்தில் இருந்து தன் அலுவலகத்திற்கு சென்ற வாசுதேவனை கண்டதும் பதறியடித்து ஓடிவந்தார் அவரது பி ஏ கணேசன்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now