அத்தியாயம் - 48

233 12 0
                                    

குழந்தையை போல் கடல் அலைகள் தவழ்ந்து வந்து மீண்டும் ஓடிவிடுவதை அந்த ரெஸ்டாரன்ட் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ருத்.

      ஆனால் மனதிலோ புயல் அடித்துக் கொண்டிருந்தது. உள்ளுக்குள் பல கேள்விகள் மனதை குழப்பி சுனாமியை ஏற்படுத்தியது.

     இங்கு வந்து பத்து நிமிடங்கள் தான் ஆயிற்று... அந்த வட்டமான மேஜையில் மூவரும் ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்திருந்தனர்...

     தேவகி மெனு கார்டை அவன் புறம் தள்ளினார். அவன் நிமிர்ந்து அவரை பார்த்து "எனக்கு எதுவும் வேணாம்", என்று மீண்டும் தலை குனிந்துக் கொண்டான்.

     அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாசுதேவனே மூவருக்கும் சேர்த்து உணவை ஆர்டர் செய்தார். அதை விஷ்ருத் கவனித்தாலும் தடுக்கவில்லை.

    இருவரும் எதாவது பேசுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருப்பது வீண் என நினைத்தவன் "எதுவுமே பேசாம இருக்கீங்க... ஏதோ சொல்ல தானே வெளியில கூட்டிட்டு வந்தீங்க... சொல்லுங்க", என்றான்.

    அதே நேரம் ஆர்டர் செய்து உணவு வந்தது. வைத்துவிட்டு பணியாள் சென்றுவிட்டார்.

    "முதல்ல சாப்டு... அப்றம் பேசலாம்", என்று தேவகி கூற, கடமைக்கென சாப்பிட்டான். மூவரும் சாப்பிட்டு முடித்திருக்க, "இப்பயாவது சொல்லுங்களேன்", என்று இறைஞ்சும் குரலில் கேட்டான்.

    "வா... கடல்ல நடந்துட்டே பேசலாம்", என்று வாசுதேவன் எழ, அவன் அவரை பார்க்க அந்த பார்வைக்கு அர்த்தம் புரிந்தவர் "சரிடா நடக்க வேணாம்... போய் உக்காரலாம் வா", என்று மென்னகை புரிந்து, அவனை அழைத்துப் போக, அவர்களோட தேவகியும் இணைந்துக் கொண்டார்.

    கடலின் ஓசை காதினில் இரைச்சல் செய்ய, அவனது கருவிழிகள் அலைகளை பார்த்துக் கொண்டிருந்தது.

    விஷ்ருத்திற்கு ஒருபுறம் வாசுதேவன் அமர்ந்திருக்க, மறுபுறம் தேவகி அமர்ந்துக் கொண்டார்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now