அத்தியாயம் - 16

400 20 0
                                    

         டெல்லியில் லோகநாதனின் வீட்டில்...

    விஷ்ருத் தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில், படுக்கையில் படுத்து, சுழலும் மின்விசிறியை வெறித்துக் கொண்டிருந்தான்.

    அவன் மனம் முழுவதும் எண்ண அலைகளில் மூழ்கியிருந்தது. தன் பாசத்திற்குரிய தந்தையான வாசுதேவன் தனது நிச்சயதார்த்தம் பற்றி கேட்டால் எப்படி எடுத்துக் கொள்வரோ? அவருக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கும்! என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவன் அறையின் கதவு தட்டும் சத்தம் கேட்க, எழுந்து போய் கதவை திறக்க, ஜான்சிராணி நின்றிருந்தாள்.

    "உள்ள வரலாமா?", என்று அவள் கேட்டதும்,
 
     "ம்ம்", என்று தலையாட்டிவிட்டு விஷ்ருத் உள்ளே நடக்க, அவள் உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்தாள்.

    "விஷ்ருத்...", என்று ஜான்சி ஆரம்பிக்க, மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க, எரிச்சலுடன் கதவை திறக்க, அங்கு ஜான்சியின் அம்மா லலிதா நின்றிருந்தார்.

     "மாப்பிள்ளை ஜான்சி, இங்கயா இருக்கா...?", என்று கேட்க, விஷ்ருத் "உள்ளே வாங்க!" என்றான்.
  
     "ஓ! ஜான்சி இங்க இல்லயா? மனிச்சிடுங்க மாப்பிள்ளை!", என்று கூறி சென்றுவிட்டார்.

     'இங்க தான இருந்தா!' என்று அவன் அறையை சுற்றிலும் தேட, கப்போர்டில் இருந்து வெளியே வந்தாள் ஜான்சி.

    அவளை பார்த்து, "எதுக்கு இங்க வந்த? இப்போ ஏன் கப்போர்டில் ஒளிஞ்ச? உங்கம்மா வேற தேடிட்டு இருக்காங்க. முதல்ல இடத்து காலி பண்ணு", என்று கத்தாத குறையாக பேசினான்.

     "விஷ்ருத் ப்ளீஸ்! ஒரு அஞ்சு நிமிஷம் உன்கூட நான் பேசனும். ரொம்ப இம்பார்டன்ட்", என்றவளை,

     "சொல்லு", என்று பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு கூறினான். அவனை பார்க்கவே பதட்டமாகவும் பயமாகவும் உணர்ந்தாள் ஜான்சி.

    "அது வந்து...", என்று ஆரம்பித்தவள் லோகநாதன் விஷ்ருத் பெயரில் உள்ள சொத்துக்காக தான் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க நினைப்பது... கட்டாயமாக தன்னை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ள வைத்தது... தான் வேறு ஒருவரை காதலிப்பது, என்று அனைத்தையும் ஒருமூச்சாக ஜான்சி அவனிடம் கூறிவிட்டு... கலக்கத்துடன் விஷ்ருத்தை பார்த்தாள்.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now