அத்தியாயம் - 12

400 16 0
                                    

         காலை பொழுது புலர்ந்ததும் எழுந்தவன், எப்போதும் போல் தனது உடற்பயிற்சியை முடித்துவிட்டு, அலுவலகத்திற்கு புறப்பட்டு தயாராகி வந்தான் அதிரதன். ராதிகா ஹாலில் அமர்ந்திருக்க அவர்களுக்காக காலை உணவை, உணவு மேஜையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் செல்வியம்மா.

   "குட் மார்னிங்ம்மா! குட்மார்னிங் செல்விம்மா!", என்றபடி கீழிறங்கி வந்தான்.

    "குட் மார்னிங் கண்ணா!", என்று ராதிகா கூற,

   "குட் மார்னிங் தம்பி", என்றார் செல்வியம்மா.

    அவனை கையோடு அழைத்து உணவை உண்ண வைத்தார் ராதிகா. செல்வியம்மா பரிமாறினார். 

      சாப்பிட்டபடியே, "அம்மா! இன்னிக்கி ஹாஸ்பிட்டல்க்கு செக்கப் போகனும். நியாபகமிருக்கா?", என்று அதிரதன் கேட்க,

    "ம்ம்...ம்ம்... நியாபகமிருக்கு", என்றார்.

   "சோ நீங்க என்கூடவே கிளம்புங்கம்மா. நம்ம ரெண்டுபேரும் ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்திடலாம்"

   "உனக்கு ஆபிஸ் இருக்குதானே?"

   "அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல, நீங்க கிளம்புங்க."

      "சரிடா!", என்றார்.

   பின் இருவரும் மருத்துவமனையிற்கு சென்றனர். அங்கு ராதிகாவை பரிசோதித்த மருத்துவர், அவரின் உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறினார். மருத்துவரிடமிருந்து இருவரும் விடைப்பெற்று வீட்டிற்கு புறப்பட்டனர்.

      சாலையில் ஆங்காங்கே நெரிசலால் வாகனங்கள் நின்றிருப்பதை கண்டவன், அலுவலகத்திற்கு நேரமாவதை உணர்ந்து  குறுக்கு பாதையில் செல்ல முடிவெடுத்து காரை வேறு புறம் திருப்பினான்.

       எதிர்பாராத விதமாக அவனுக்கு பக்கவாட்டில் உள்ள வாகனத்தை அதிரதன் இடித்துவிட்டான். அந்த காரும் அதே நேரத்தில் முன் நோக்கி வந்ததால் அதுவும் இடித்துவிட்டது.

        "ஷிட்...!", என்று அதிரதன் கோபத்தோடு காரைவிட்டு வேகமாக வெளியேறி அந்த காரை நோக்கி வந்தான்.
 
      "அதி இருடா சண்டையெல்லாம் வேண்டாம்...", என்ற ராதிகாவின் குரல் காற்றில் கரைந்தது.

[✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞Where stories live. Discover now