Ep 93 UNALAE... UNAKAGAVAE...

70 3 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 93

அனைவரும் அவர் அவர் வேலைகளை கான சென்ற பிறகு...

கதிர் ஹேமா சொன்ன பேச்சி தங்கி இருக்கும் இடத்திற்கு தனியாக சென்றான்...

பேச்சி ஏற்கனவே தனக்கு உதவ யாரும் இல்லை என்று மனம் வெறுத்து அமர்ந்து இருக்க...

அங்கே கதிரை கண்டதும் கோபம் கண்ணில் எரிமலையாய் பொங்கியது...

கதிர் உள்ளே செல்ல முயல...

பேச்சி: நில்லு டா அங்கேயே... என்று கத்தினாள்...

கதிர் கால் வாசலை தாண்டாமல் வெளியே நின்றது...

கதிர்: சித்தி... நான் சொல்லுறது கொஞ்சம் பொறுமையாக கேளுங்கள்...

பேச்சி: நிறுத்து டா... என்ன சொல்ல போற என்று எனக்கு நல்லா தெரியும்... ஆனால் நீ சொல்லுவதை கேட்க நான் தயாராக இல்லை... நீ வெளிய போ... எனக்கு யாரையும் பாக்க புடிகல... பேசவும் புடிகள... போ வெளில...

கதிர்: சித்தி... கொஞ்சம் அமைதியாக நான் சொல்லுவதை கேளுங்க...

பேச்சி: நான் யார் கிட்டயும் பேச விரும்பல... என்னை கொஞ்சம் தனியா இருக்க விடு...

கதிர்: இத்தனை நாள் தனியாக தானே இருந்தீங்க??? என்ன சாதனை செய்தீர்கள்??? உங்களுக்கு என்று ஒரு குடும்பம், குழந்தை, சொந்தம், பந்தம், நட்பு ஏதாச்சும் இருக்கா??? ஒண்ணுமே இல்லாம தனி மரமா தானே இருக்கீங்க??? யாருடைய அன்பை சம்பாதித்து வைத்து இருக்கிறீர்கள்??? எல்லோருடைய வெறுப்பையும் கோபத்தையும் தானே சம்பாதித்து வைத்து இருக்கிறீர்கள்??? நாளை நீங்கள் செத்தால் உங்களுக்காக அழுவதற்கு வேண்டாம் உங்களை தூக்கி செல்ல 4 பேர் வேண்டும் என்பதை கூட மறந்து விட்டது தானே உங்கள் மனம்... அப்படி நீங்கள் அதை மறக்கவில்லை என்றால் இந்த மாறி எல்லாம் மற்றவர்களுக்கு கெடுதல் செய்து இருப்பீர்களா??? இல்லை தெரிந்தும் பலர் வாழ்வை கெடுத்தது இருப்பீர்களா??? இப்பொழுது கூட எங்களை அழைக்க வேண்டும் என்று தானே எந்த சுந்தரத்துடன் சேர்ந்து ஏதோ சதி செய்து கொண்டு இருந்தீர்கள்???

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Onde histórias criam vida. Descubra agora