Ep 72 UNALAE... UNAKAGAVAE...

98 8 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
EP 72

கோபமாய் வெளியே சென்ற ஜீவா நேராக மதுபான கடைக்கு சென்றான்...

மதுவை வாங்கி கொண்டு யேங்கே அமர்வது என்று தேடினான்...

ஒரு மேசை காலியாக இருக்க...

அங்கே சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு மேசை மீது இருந்த மதுபானத்தை வெறித்து பார்த்து கொண்டு இருந்தான்...

அப்பொழுது அவனின் தோளை ஒரு கை பிடித்தது...

ஏற்கனவே ஒரு வித மான வெறுப்பில் இருந்த அவன் மிகவும் கோபம் கொண்டு...

ஜீவா: என்ன நிம்மதியா குடிக்க கூட விட மாட்டீங்களா டா??? என்று கத்தியவாரு திரும்ப...

அங்கே நின்றது மகாநதி ஷங்கர்...

ஜீவா: அன்னே... என்ன அன்னே இங்க இருக்கீங்க??? எப்ப ஊருக்கு வந்தீங்க???

ஷங்கர்: நான் வந்தது இருக்கட்டும்... நீ எதுக்கு தம்பி இந்த மாறி இடத்துக்கு எல்லாம் வர்ற??? உங்க அன்னே இதெல்லாம் நான் படதுள்ள செய்யும் பொழுது என்னை phone பண்ணி திட்டுவான்... உங்களை எப்படி டா இதை எல்லாம் செய்ய விட்டான்???

இந்த வார்த்தைகளை கேட்ட ஜீவா கண்ணீர் வடிக்க...

ஷங்கர் அவனை தாங்கி பிடித்து கொண்டு வெளியே அழைத்து கொண்டு வந்தார்...

சற்று நேரம் கழித்து...

ஜீவா: நான் என்ன அன்னே செஞ்சேன்??? நான் என்ன தப்பு செஞ்சேன்??? எங்க அன்னே சொன்ன பள்ளியில் தான் படித்தேன்... அவங்க சொன்ன படிப்பை தான் கல்லூரியில் உம் படித்தேன்... இப்பொழுது வேலைக்கு யும் அங்கே தான் செய்து கொண்டு இருக்கிறேன்... எனக்கு என்று எந்த ஆசையும் வைத்து கொள்ளாமல் அவர் சொல்லும் ஒரு வார்த்தை ஐ தானே என் வேத வாக்காய் நினைத்து நடந்தேன்... என் வாழ்க்கை தான் இப்படி ஆகி விட்டது என்று எனக்கு பிடித்த பெண்ணை மட்டும் தான் அவரை மீறி திருமணம் செய்தேன்... அது ஒரு குற்றமா??? இப்படி எதையுமே எனக்கு என்று செய்து கொள்ளாமல் அவர் சொல்வதற்கு தலை ஆட்டும் பொம்மையாக தானே இருக்கிறேன்... அதனால் எனக்கு என்று எந்த ஆசை தேவை இருக்காது என்று நினைத்து கொண்டாரா???

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now