Ep 63 UNALAE... UNAKAGAVAE...

128 8 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 63

அனைவரும் உறங்க சென்றாலும் லட்சுமி அம்மா மட்டும் தன் பிள்ளைகள் அவருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சியை எண்ணி கொண்டே இருக்க...

பொழுது புலர்ந்தது...

காலை எழுந்த முல்லை கதிரை தாண்டி தன் கட்டிலை விட்டு வர...

கண்ணில் இருந்த வெள்ளரி கட்டை அவிழ்க்க விட்டு கண்களை கண்ணாடி வழியாக பார்க்க...

அது சேக்க சிவந்த வானம் போல...

காஷ்மீர் மிளகாய் போல...

அந்த ரத்தத்தின் சிவப்பாய் காட்சி அளிக்க...

பயந்தாள் முல்லை...

கதிர் திரும்பி படுக்கையில் அவனின் கால் ஓரத்தில் இவள் அமர்ந்து இருக்க...

கதிர்: என்ன முல்லை... காலைல இவளோ டல் லா இருக்க??? மாமா பூஸ்ட் தரவா???

முல்லை அமைதியாய் இருக்க...

கதிர் எழுந்து அவள் அருகில் வந்து...

அவள் முகத்தை தன் கையில் எந்த...

அப்பொழுது தான் அவளின் கண்களை அவன் பார்த்தான்...

கதிர்: என்ன முல்லை... கண் இப்படி சேவந்து இருக்கு??? டாக்டர் கிட்ட போய்ட்டு வரலாம் வா...

முல்லை: கண் எரிச்சல் இல்லை மாமா... உடம்பு சூடா இருக்கும் போல... அதான் சிவந்து இருக்கும்... வெலக்கேண்ணை வைத்தாள் சரி ஆகி விடும்...

கதிர்: அதெல்லாம் அப்பறமா செஞ்சுகோ... எனக்காக இப்ப நீ டாக்டர் கிட்ட வர... என்று சொல்லி யாரோ ஒருவருக்கு போன் செய்து கதிர் முல்லை வரவை அந்த மருத்துவ மனையில் பதிவு செய்தான்...

பின் முல்லை குளித்து விட்டு அறைக்கு வர...

கதிர் குளிக்க சென்றான்...

முல்லை தலை வாரி விட்டு வெளியே வந்து அங்கு அமர...

தலையை தொங்கப் போட்டுக் கொண்டே அமர்ந்தாள்...

தனம்: இந்தா முல்லை... டீ குடி... என்று நீட்ட...

முல்லை அதை குனிந்த வாக்கில் எடுக்க...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now