Ep 59 UNALAE... UNAKAGAVAE...

115 9 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 59

தனம்: உங்க ரெண்டு பேருக்கும் பிள்ளை பிறக்கும்... அது உங்க கூடவே தான் வளரும்... உங்க வம்சம் தழைத்து வரும்... நீங்க ரெண்டு பேருமே அம்மா தான்... உங்கள் பிள்ளைகள் உங்கள் கண் முன்னாடி தான் வளரும்... கவல படாதீங்க... என்று கும்குமத்தை பூசி விட்டால்...

முல்லை மீனா இருவரும் குழந்தை தங்களோடு இருக்க போவதை எண்ணி மகிழ்ந்தாலும் முல்லை மனதில் அந்த மகரிஷி சொன்னது நெருடலை தந்தது...

தனம்: என்ன முல்லை... என் வார்த்தையில் உனக்கு நம்பிக்கை இல்லையா??? இன்னும் குழப்பமா???

முல்லை: அது வந்து சாமி.... என்று இழுக்க...

தனம்: முல்லை... உன் புள்ளை உன் கூட உன்னோட வீட்ல தான் வளரும்... உன் கண் முன்னாடி தான் வளரும்... ஆனா அதை உன் குழந்தை என்று உன்னால் உரிமை கொண்டாட முடியாது... மேலும் உன்னிடம் வளரும் குழந்தை உனக்கு பிறந்த குழந்தையாக இருக்காது... ஆனால் அதை உன்னால் யாருக்கும் விட்டு தர முடியாது... காரணம் அது உன் உயிரில் கலந்த ஒன்றாக மாறி விடும்... உனக்கும் உன் குழந்தைக்கும் ஒரு குறையும் இருக்காது... என்னை நீ தாராளமாக நம்பலாம்... போய்ட்டு வா... என்று கூற...

முல்லை தான் குழந்தை நன்றாக வளர்ந்தால் போதும் என்று நிம்மதியுடன் அங்கிருந்து நகர...

தனம்: டேய் மூர்த்தி... வா டா இங்க???

அதை கேட்ட மீனா ஜீவாவிடம்...

மீனா: என்ன டா... உங்க அண்ணி... இப்படி எல்லார் முன்னாடியும் உங்க அண்ணா ஐ டேய் என்று கூபிடுறாங்க...

ஜீவா: ஏய்... அவங்க இப்ப எங்க அண்ணனுக்கு மனைவி இல்ல... நம்ம குலசாமி... கொஞ்சம் நேரம் பேசாம இரு...

தனம்: என்ன அங்க சத்தம்... இங்க நான் மட்டும் தான் பேசணும்... உங்களுக்குள்ள பேச இது இடம் இல்லை... உங்களுக்கு வேணும் என்றதை என்னிடம் கேளுங்க... என்று சத்தம் போட...

அமைதி ஆனார்கள் ஜீவா மீனா தம்பதி...

தனம்: டேய் மூர்த்தி... வாடா இங்க... என்று மீண்டும் அழைக்க...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now