Ep 16 UNALAE... UNAKAGAVAE...

317 25 8
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 16

காலை எழுந்ததும் அனைவரும் குளித்து முடித்து அழகாய் உடை அணிந்து கண்களில் தெளிவோடும், வாயில் சிரிப்போடும், மனதில் மகிழ்ச்சியுடனும், மலர்ந்த முகதோடும், உடலில் புத்துணர்ச்சியோடும் இருந்தனர்...

அவர்களின் மனதை அவர்களின் முகமே காட்டி குடுத்தது... அவ்வளவு நிம்மதியாய் ஆனந்தமாய் இருந்தனர்...

ஆனால் கைலாஷ் மட்டும் பள்ளிக்கு கிளம்ப மாட்டேன் என்று அடம் செய்து கொண்டிருந்தான்...

தனம் அவனை சமாதானம் செய்து அனுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தாள்...

மூர்த்தி: பரவால்ல விடு தனம்... ஒரு நாள் தானே... இருந்துட்டு போரான்...

தனம்: நீங்களே அவனா கெடுத்து வைங்க மாமா...

கைலாஷ்: அப்பா... நன்றி அப்பா... இன்னைக்கு நான் ஜாலியா இருப்பேன் தெரியுமா???

கண்ணன்: ஏன்???

ஜீவா: ஏன்னா இன்னைக்கு தான் ஸ்கூல் போகல லா???

கைலாஷ்: இல்ல சித்தப்பா... கதிர் சித்தப்பா, முல்லை சித்தி, முருகன் தாத்தா, பார்வதி அம்மாச்சி எல்லாரும் வந்து இருகான்கள்ள??? அதான்...

முல்லை: எங்களை எல்லாம் உனக்கு எவ்வளவு பிடிக்கும் கைலாஷ்???

கைலாஷ்: எனக்கு அளவு ல சொல்ல தெரியாது... மீனா சித்திய எந்த அளவுக்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு உங்களையும் புடிகும்...

மீனா: அப்போ என்ன எந்த அளவுக்கு புடிகும்???

கைலாஷ்: இந்த கடல் அளவுக்கு புடிக்கும் சித்தி... என்று சொல்லி ஓடி வந்து அவள் தோளை கட்டி கொண்டான்...

மீனா அவனை தன் பக்கம் வர சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டால்...

மீனா: உனக்கு என் மேல கோவம் இல்லையா???

கைலாஷ்: இல்ல சித்தி...

தனம்: கொஞ்சுணது போதும் இத சித்தி டா கொடுத்து சாப்பிட சொல்லு பாப்போம்... என்று மணத்தக்காளி கீரை ஜுஸ் குடுத்தால் தனம்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now