Ep 49 UNALAE... UNAKAGAVAE...

106 11 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 49

தனம்: வாங்க எல்லாரும் சாப்பிடலாம்... நாளைக்கு காலைல பூசாரி வந்து விடுவார்... அதற்குள் அனைத்தையும் எடுத்து வைக்க வேண்டும்...

சரி என்று அனைவரும் எழுந்து சென்று கைகளை கழுவி விட்டு சாப்பிட்டனர்...

வழக்கம் போல ஆண்கள் அவர்களது அறைகும் பெண்கள் அவர்கள் அரைக்கும் சென்று உறங்கினர்...

காலை 4 மனி அளவில் தனம் எழுந்து குளித்து முடித்து சமையல் அறை முழுவதையும் துடைத்து சுத்தம் செய்த பின்னர் அனைவருக்கும் டீ போட்டு பிலாஸ்கில் எடுத்து வைத்து விட்டு...

சாமிக்கு உணவு தயாரிப்பதை போல எச்சில் படாமல் சுத்தமாய் சமைத்து வைத்தாள்...

அதற்குள் மனி 7 ஆகி விட்டது...

மற்றவர்கள் தானாக எழுந்து குளித்து தங்க துணிகளை துவைத்து காயா போட்டனர்...

கதிர், ஜீவா, மூர்த்தி மனதில் இன்றோடு இந்த விரதம் முடிய போகிறது என்று சந்தோஷம் தாண்டவம் ஆடியது...

கண்ணன் மனதில் நாளை முதல் நம்மாக்கு பிடித்த அனைத்து உணவையும் உண்ணலாம் என்று எண்ணம் ஓடியது...

இத்தனை நாட்கள் பிரிந்து உறங்கிய கண்கள் ஆரும் ஆனந்த களிபொடு அனைத்து வேலைகளையும் செய்தன...

லக்ஷ்மி அம்மா மனதில் மட்டும் யாருக்கும் எதும் ஆக கூடாது என்று பயம் கலந்த தவிப்பு இருந்தது...

மூர்த்தி காலை 7.30 மனி போல கலைவாணி, முருகன் மாமா, பார்வதி அத்தை, ஜகா, கஸ்தூரி, வனிதா அம்மா என்று இரத்த சொந்தம் இருந்த அனைவரையும் கூப்பிட்டு நினைவு படுத்தினான்...

அவர்களும் 8 மணிக்கு எல்லாம் வந்து சேர்ந்தனர்...

பின் மூர்த்தி வண்டியில் சென்று பூசாரியை அழைத்து வந்தான்...

பூஜை ஆரம்பம் ஆனது...

அவர் பல மந்திரங்களை சொல்லி...

அங்கு இருக்கும் ஓம குண்டத்தில் புகை வளர்த்து...

சாமி சிலைக்கும், படத்திற்கும் பூக்களால் அபிஷேகம் செய்து...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now