Ep 26 UNALAE... UNAKAGAVAE...

193 15 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 26

மூர்த்தி இடம் வாங்கிய கடையின் பத்திரத்தை படித்து பார்த்தான் ஜனா...

அது உண்மையான பத்திரம் தான் என்று எண்ணி அவன் அறையில் இருந்த அலமாரியில் வைத்தான்...

இதை கவனித்த கலைவாணி ஏதும் சொல்லாமல் தனக்குள் சிரித்துக் கொண்டு அங்கு இருந்து நகர்ந்தார்...

அடுத்த நாள் கைலாஷ் மருத்துவ மனையில்  அட்மிட் செய்ய பட்டு சில பரிசோதனைகள் செய்ய பட்டது...

அவனின் இரத்த மாதிரிகளை எடுக்க பட்டது...

ஆபரேஷன் செய்யும் பொழுது அவனுக்கு எந்த பதட்டமும் இருக்க கூடாது என்பதற்காக அவனின் தாய் தனம் மட்டும் உள்ளே வர அனுமதி வாங்கினால்...

அவனுக்கு தேவையான இரத்தம் வந்து சேர்ந்தது...

அடுத்த நாள் ஆபரேஷன் செய்ய அனைத்து டாக்டர்களும் தயார் ஆனார்கள்...

காலை 11 மணி அளவில் ஆபரேஷன் செய்யலாம் என்று முடிவு ஆனது...

இதே நேரத்தில் முல்லை லட்சுமி அம்மா வர்கள் இருவரும் பூஜை அறையில் சாமிக்கு பூஜை செய்து கொண்டு வேண்டி கொண்டு இருந்தனர்...

கலைவாணி, ஜனா, மீனா, ஜீவா நால்வரும் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்... அதனால் அவர்கள் அங்கே இருந்தனர்...

கைலாஷ் காக கண்ணன் விரதம் இருந்தான்...

கடையில் கடை பையனும் குமரேசன் மாமாவும் பார்த்து கொண்டு இருந்தனர்...

அன்று பார்த்து கடையில் சரியான வேளை என்பதால் குமரேசன் மாமாவின் மாணவி கோகிலா அத்தை வந்து சற்று நேரம் வியாபாரம் பார்த்தார்...

ராதாவும் ரித்துவும் அவர் அவர் வீட்டில் கைலாஷ் காக பூஜை செய்தனர்...

மருத்துவ மனையில் மூர்த்திக்கு துணையாய் கதிரும் அவனின் மேனேஜர் உம் உடன் இருந்தனர்...

10.30 மணிக்கு கைலாஷ் தனம் இருவரும் ஆபரேஷன் தேடருக்குள் வந்தார்கள்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Waar verhalen tot leven komen. Ontdek het nu