Ep 42 UNALAE... UNAKAGAVAE...

133 10 2
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 42
Part 1

கதிர் வாடிய முகத்தோடு உள்ளே வந்தான்...

அவனை கண்டதும் அனைவரும் உள்ளே செல்லாமல் அவன் வரவை பார்த்து கொண்டு இருந்தனர்...

மூர்த்தி: என்ன ஆச்சு கதிர்??? ஏன் இப்படி இருக்க???

தனம்: யாரா பாக்க போன???

கதிர் பதில் கூறாமல் நின்றார்...

முல்லை: ஏங்க... சொல்லுங்க... யார் என்று...

கதிர் வாடிய முகதொடும்... மெலிந்த குரலோடும்...

ஜனா மாமா...

இதை கேட்ட அனைவரும் சோகத்தில் ஆழந்தனர்...

கலைவாணி மனதில் இருந்த சோகத்தை வெளி காட்டாமல் கண்ணீரை மட்டும் கொட்டினார்...

அதனால் அவர் அனைவருக்கும் பின்னர் நின்றார்...

அவள் கண்ணீர் துளிகள் அவருக்கு மட்டுமே தெரிந்தது...

கதிரின் பதிலை கேட்ட மற்ற அனைவரும் அவனை பார்க்க...

கலை: அவர் நல்லா இருக்காரா மாப்ள... என்று தழு தழுத்த குரலில் கேட்க... அழுகை அவர் வார்த்தைகளை மீறி வந்தது...

என்றுமே மூளைக்கு இருக்கும் உறுதியை விட மனதிற்கும் சற்று கம்மி தான் என்பது அவர்களது விஷயத்தில் நமக்கும் புரிந்தது...

கதிர்: நமக்கு நடந்த எந்த பிறட்ச்சனைக்கும் மாமாவுக்கும் சம்பந்தமே இல்லை அத்தை...

மூர்த்தி: என்ன டா சொல்லுற???

கதிர்: அத்தையை குத்தின அவளும் நம்ம கடைக்கு வந்து ஒரு ஆணும் பெண்ணும் எனக்கு தர வேண்டிய ஒரு பொட்டலம் என்று கொடுத்து பொழுது வெளியே நின்ற பெண்ணும் அக்கா தங்கை... அவர்கல் ராமையாவுக்கு வேண்டியவர்கள்... அவனின் நிலைக்கு நான் தான் காரணம் அதனால் என்னை பழி வாங்க எண்ணி இவ்வாறு நம் குடும்பத்துக்கு செய்துள்ளார்கள்...

தனம்: அட கடவுளே... இப்படி எல்லாம் கூடவா செய்வாங்க???

கதிர்: அது மட்டும் இல்லை அண்ணி... இவங்க வெறும் அம்பு தான்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now