Ep 32 UNALAE... UNAKAGAVAE...

199 17 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 32

கதிரும் முல்லையும் தங்கள் அறையில் பேசி விட்டு வெளியே வந்தார்கள்...

அப்பொழுது வாசலில் ஒரு கார் வந்து நின்றது...

சத்தம் கேட்டு அனைவரும் எட்டி பார்க்க... கதவு சாத்தி இருந்தது...

தனம் கதவை திறக்க சென்றால்...

முல்லை: அக்கா... இருங்க... நான் போய் பார்க்கிறேன்... என்று மெதுவாக கதவின் அருகில் சென்று லென்ஸ் வழியே பார்த்தாள்...

வெளியே காரை விட்டு முதலில் ஜனா இறங்கி வந்து பேச்சியின் பக்கம் இருக்கும் கதவை திறக்க அவள் மகாராணி போல கீழே இறங்கினால்...

மூர்த்தியின் வீட்டு கதவு சாத்த பட்டு இருந்தது...

அதனால் அவளின் 5 அடி ஆட்களில் ஒருவன் வந்து கதவை தட்டினான்...

முல்லை கதவை திறக்க வில்லை...

மீண்டும் தட்டினான்...

பதில் இல்லை...

அவன் பேச்சியிடம் சென்று சொல்ல அவளே அருகில் வந்தாள்...

அதற்குள்,

தனம்: முல்லை... கதவ தொற என்ன பண்ணிக்கிட்டு இருக்க...

முல்லை: இருங்க அக்கா... என்று கையினால் சைகை செய்தாள்...

ஜீவாவும் கதிரும் தனத்தை கொஞ்ச நேரம் இருங்க அண்ணி என்று ஒரே நேரத்தில் கூறினர்...

மூர்த்திக்கு இவர்கள் ஏதோ செய்து இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது...

மீனாவும் கண்ணனும் முல்லை ஏன் கதவை திறக்கவில்லை என்று யோசித்துக்கொண்டே நின்றனர்...

இவற்றையெல்லாம் லக்ஷ்மி அம்மா பார்த்துக்கொண்டே இருந்தார்... பதிலேதும் பேசவில்லை...

பேச்சி கதவருகே வந்து கதவை தட்டினாள்...

முல்லை கதவை மெதுவாகத் திறந்து...

முல்லை: உள்ளே வாங்க அத்தை... என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்...

பேச்சி உள்ளே வருவதற்காக அவளின் அடி ஆட்களில் ஒருவன் அந்த கதவை முழுவதுமாக திறந்தான்... பேச்சு அவன் பின்னால் சென்றாள்... அவளைப் பின் தொடர்ந்தான் ஜனா... பேச்சியின் மற்ற அடியாட்கள் வெளியிலேயே நின்றனர்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now