OS UNALAE... UNAKAGAVAE...

193 17 0
                                    

UNALAE... UNAKAGAVAE...

One Shot

முல்லையும் கதிரும் பள்ளியில் படிக்கும் பொழுது...

கதிருக்கு முல்லை மீது காதல் வந்த தருணம்...

கதிரும் அவன் நண்பனும் பள்ளியில் படிக்கும் பொழுது தான் முல்லையும் அதே பள்ளியில் அவன் வகுப்பிலேயே வந்து சேர்ந்தாள்...

அவள் எதேச்சையாக தான் வந்து அங்கு சேர்ந்தாள்...

சேர்ந்த 2 மாதத்திலேயே அவள் நன்கு படித்து வகுப்பில் முதல் மாணவியாக வந்தால்...

கதிர் அந்த வகுப்பில் தான் இருக்கிறான் என்பதை அவள் அறியவே அவளுக்கு 4 மாதங்கள் ஆனது... அவன் இருக்கும் இடமே தெரியாது...

அதும் இல்லாமல் அவன் படிப்பில் சராசரி மாணவன் தான்...

ஆனால் முல்லை நன்கு படிப்பதால் அவளை அனைவருக்கும் பிடிக்கும்... நன்கு தெரியும்... அது மட்டும் இல்லாமல் அவள் அப்பா பெரிய ஆள் என்பதும் அவளை அனைவருக்கும் தெரிய ஒரு காரணம் ஆகும்...

கதிர் அவளிடம் பல முறை பேச முற்பட்டு இருக்கிறான்... ஆனால் அவள் ஒரு அடி முன்னாள் எடுத்து வைத்தால் இவன் 4 அடி பின்னால் வைப்பான்... அவ்வளவு பயம் அவனுக்குள்...

அதையும் தாண்டி ஒரு நாள் அவளிடம் பேச தைரியத்தை வரவழைத்து கொண்டு அவளிடம் சென்றான்... அன்று அவள் அவளின் தோழியொடு ஒரு கடையில் நின்று கரும்பு சாறு குடித்து கொண்டு இருந்தாள்...

கதிர் அவள் அருகில் சென்று...

கதிர்: முல்லை...

அது அவன் காதில் கூட கேட்டு இருக்காது... அவ்வளவு மெதுவாக கூப்பிட்டான்...

கதிர்: (சற்று சத்தமாக) முல்லை... என்று கூபிட்டான்...

கதிரின் குரல் கேட்டு திரும்பின முல்லை தன் கையில் இருந்த கண்ணாடி கோப்பையை தூக்கி எறிந்தால்...

அது அவனை தாண்டி அவன் பின்னால் இருந்த ஒருவன் மேல் பட்டது...

கண் மூடி திறக்கும் நேரத்தில் அவள் அவன் அருகில் சென்று ஓங்கி நான்கு ஐந்து அறை விட்டு அவனை புரட்டி எடுத்தால்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now