Ep 37 UNALAE... UNAKAGAVAE...

164 13 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 37

குளித்து முடித்து அவன் வருவதை கண்டால் தனம்...

தனம்: டேய் கண்ணா... எப்போ டா வந்த???

கண்ணனிடம் இருந்து பதில் வரவில்லை...

வாயில் புன்னகை இருந்தது...

கண்களில் காதல் வழிந்து ஓடியது...

மனம் எதையோ நினைத்து கொண்டு இருந்தது...

கண்ணனை இப்படி பார்க்க புதிதாய் இருந்தது தனத்திற்கு... அதனால் அவள் அனைவரையும் கூப்பிட்டு காண்பித்தாள்...

முல்லை மீனா இருவரும் அவனை கூப்பிட... அவன் காதுகள் அதை கேட்க வில்லை...

ஒரு தட்டு தட்டினால் தனம் அவன் கன்னத்தில்...

கண்ணன்: என்ன அண்ணி???

தனம்: என்ன டா... நான் கேட்டுகிட்டே இருக்கேன்... நீ பாட்டுக்கு லூசு மாறி சிரிச்சுகிட்டே இருக்க...

கண்ணன்: அது ஒண்ணுமில்ல அண்ணி... என்று நெளிந்தான்...

கையில் இருந்த துண்டால் தன் முகத்தை மூடினான்...

தனம், மீனா முல்லைக்கு, இது புதிதாகவும் விநோதமாகவும் இருந்தது...

தனம்: முல்லை... அவனை நல்லா வலிகிற மாறி ஒரு கொட்டு கொட்டு...

முல்லை அவனை கொட்ட மீனாவும் சேர்த்து ஒரு கொட்டு கொட்டினால்...

வலியில்... கண்ணன்....

ஐயோ கடவுளே... இந்த குடும்பத்துல எனக்கு என்று பேச யாருமே இல்லையா??? என்று கத்தினான்...

அவனின் சத்தம் கேட்டு வெளியே வந்தார் கலைவாணியின், அந்த பெண் சுமதியும் வெளியே வந்தனர்...

புதிதாய் இருந்த அந்த பெண்ணை பார்த்து உடன் அமைதியாக முல்லையிடம்...

கண்ணன்: யார் அண்ணி இவங்க??? இந்த நேரத்துல நம்ம வீட்ல என்ன பணுறாங்க...

முல்லை: அவங்களுக்கு ஒரு சின்ன பிறட்ச்சனை... அதான் நம்ம வீட்டில் இருக்காங்க...

கண்ணன்: சரி...

கலை: என்ன பா... என்ன ஆச்சு???

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now