Ep 95 UNALAE... UNAKAGAVAE...

79 5 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 95

கதிர், கண்ணன், மூர்த்தி மூவரும் மணிமேகலை, ரித்துவிடம் சொல்லி விட்டு வீடு திரும்பினார்...

அங்கே ஜனா வண்டி நிற்பதை பார்த்து விட்டு...

கதிர் என்ன நடந்தது என்பதை நினைத்து என்ன நடக்க போகிறது என்பதை புரிந்து கொண்டான்...

ஆனால் மூர்த்தி, கண்ணனுக்கு ஜனா கலை வந்து இருக்கிறார் என்று எண்ணி கொண்டே உள்ளே நுழைய...

தனம், கலை எதிர் எதிரே அமர்ந்து இருந்தனர்...

முல்லை லக்ஷ்மி அம்மாவின் ஒரு பக்கம் அமர்ந்து இருக்க...

மீனா மற்றும் ஒரு புறத்தில் நின்று கொண்டு இருந்தார்...

லக்ஷ்மி அம்மா அமைதியாக அமர்ந்து இருக்க...

அங்கே பேச்சி ஜனா இருவரும் இருக்கையில் அமர்ந்து இருந்தனர்...

மூர்த்தி: வாங்க மாமா... வாங்க அத்.......... என்று சொல்லி கொண்டே நுழைய அங்கே பேச்சி அமர்ந்து இருப்பதை கவனித்து விட்டு அமைதியாக உள்ளே நுழைந்தார்...

மூர்த்தி ஒரு இருக்கையில் அமர்ந்து விட்டு...

மூர்த்தி: கண்ணன்... நீ கடைக்கு போய்ட்டு ஜீவாவை வீட்டுக்கு வர சொல்லு... என்று சொல்ல...

பேச்சி: தம்பி....................

அனைவரும் பேச்சி ஐ பார்க்க...

பேச்சி: தம்பி நீங்களும் இங்கேயே இருங்க... ஜீவா மாப்ளையையும் இங்கே வர சொல்லுங்க... அவர் வரும் வரை நான் காத்து இருக்கிறேன்... என்று சொல்ல...

பேச்சி இன் வாயில் இருந்து வார்த்தைகள் அனைவருக்கும் தேனோடு சேர்த்து உப்பை கொடுத்தால் எப்படி உணர முடியுமோ அதே உணர்வு தான் அவர்களுக்கு ஏற்பட்டது...

பேச்சி இன் வார்த்தைகள் ஒரு புறம் சந்தோஷத்தை கொடுத்தாலும் மற்றும் ஒரு என்ன பிரச்சனைக்கு இவர் இங்கே வந்து இருக்கிறார் என்று கலக்கம் தோன்றியது...

கண்ணன் ஜீவாவுக்கு phone செய்து வீட்டிற்க்கு வர சொல்ல...

சிறிது நேரம் கழித்து ஜீவா வந்து சேர்ந்தான்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now