Ep 94 UNALAE... UNAKAGAVAE...

70 3 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 94

கதிர் பேச்சி ஐ சந்தித்து விட்டு தன் வண்டியை சற்று வேகமாய் செலுத்தி சென்று கொண்டு அந்த ஆள் நடமாட்டம் இல்லாத பாதை வழியே சென்று கொண்டு இருந்தான்...

தூரத்தில் ஒரு கார் கவிழ்ந்து கிடப்பதை பார்த்து வண்டியின் வேகத்தை குறைக்க...

மெதுவாக அந்த கவிழ்ந்து கிடந்த காரின் அருகில் சென்றான்...

தன் மகிழுந்தை விட்டு கீழே இறங்கி அங்கேயே நின்று கீழே குனிந்து அந்த காரை பார்க்க...

இரத்த வெள்ளத்தில் இரண்டு பேரும்...

ஒருவர் கால்கள் மாட்டிய நிலையில் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தார்...

கதிர் அருகில் ஓடி சென்றான்...

யார் என்று பார்க்க கீழே குனிந்தான்...

அது அந்த சுந்தரத்தின் கார் தான்...

சுந்தரமும் சுந்தரத்தின் மச்சானும் தான்...

இருவரும் காரின் பின் புறம் அமர்ந்து இருந்தனர்...

சீட் பெல்ட் போடாமல் அமர்ந்து இருந்த காரணத்தால் தான் அவர்களுக்கு பலத்த அடி...

முன்னே அமர்ந்து இருந்தது வண்டியின் ஓட்டுணர் தான்... அவரின் கால்கள் தான் கீழே சிக்கி கொண்டு அவர் வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தார்...

மற்றபடி அவருக்கு எந்த அடியும் இல்லை...

உடனே கதிர் தன் கைபேசியில் அவரசர உதவி எண்ணுக்கு phone செய்து விவரம் சொல்லி விட்டு காரின் அருகில் வந்து...

கதிர்: ஐய்யா... ஐய்யா... என்று குரல் கொடுக்க...

பின்னே அமர்ந்து இருந்தவர்கள் வலியால் முனகி கொண்டு இருந்தனர்...

கதிரின் குரல் கேட்டு அவர்கள் பதிலுக்கு எங்களை காப்பாற்றுங்கள் என்று சொல்ல...

கதிர் எந்த வழியாக அவரை காப்பாற்றுவது என்று பார்த்தான்...

வார் கவிழ்ந்த நிலையில் இருந்த காரணத்தால் காரின் கண்ணாடிகள் அனைத்தும் சுக்கு நூறாக உடைந்து இருந்தது...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now