Ep 62 UNALAE... UNAKAGAVAE...

88 4 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 62

லட்சுமி அம்மா: என் பிறந்த நாள் மா...

தனம்: அட ஆமா ல... மறந்தே போய்ட்டேன் அத்தை... சாரி... பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்தை...

முல்லை: பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்தை...

மீனா: பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்தை...

கண்ணன்: ஹேப்பி பர்த்டே மம்மி...

கைலாஷ் அவருக்கு ஒரு கொத்து பூவை கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாட்டி... என்று வாழ்த்த...

முல்லை சந்தடி சாக்கில் சைக்கிள் ஓட்டி விட்டால்...

லட்சுமி அம்மா: எல்லாருக்கும் ரொம்ப நன்றி... என்னோட பிறந்த நாளை நியாபகம் வைத்து வருஷா வருஷம் வாழ்த்தி ஒரு பரிசு தர்றதை மட்டும் அந்த பொண்ணு சரியா செஞ்சுரும்... ஆனா ஊருக்கு மட்டும் வராது...

தனம்: யார் அத்தை... ஏன் ஊருக்கு வர மாட்டாங்க???

லட்சுமி அம்மா: அந்த பொண்ணு பேர் மேரி... நம்ம வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தான் இருந்துச்சு... பாவம் நல்லா படிச்சு 10 தில் இந்த மாவட்டத்தின் முதல் மாணவி... 12 தில் மாநில அளவில் 3 வது மாணவி... அதனால் இந்த ஊரில் இருக்கும் நல்ல கல்லூரியில் அவளுக்கு இடம் கிடைத்து நல்லா படிச்சா... தங்க மெடல் வாங்க வேண்டும் என்பது தான் அவளின் ஆசை... அதற்கு என்று ரொம்ப கஷ்ட பட்டு படித்தால்... கல்லூரி இறுதி ஆண்டு படிகிறப்ப அவங்க மாமா பையன் ஐ காதலிச்சு வீட்டில இருக்க எல்லார் சம்மதத்தோடு கல்யாணமும் பண்ணிக் கிச்சு... ஆனா அவளை இந்த ஊர் ரௌடி கொக்கி குமரன் என்றவன் காதலிக்கிறேன் என்று சொல்லி ரொம்ப தொந்தரவு செய்தான்... அவள் வீட்டுக்கு செல்லும் பொழுது அவளிடம் வம்பு செய்வது... கோவிலுக்கு போனால் அவளிடம் வந்து கோவிலுக்கு வந்துட்ட வா இங்கேயே கல்யாணம் செஞ்சுகலாம் என்பது... கல்லூரிக்கு சென்றால் அவளை இழுத்து வந்து நடு கிரவுண்டில் வைத்து அனைவரையும் அழைத்து இவள் நான் காதலிக்கிற பெண்... இவளை யாராவது மனதில் நினைத்தால் அவர்களை கொன்று விடுவேன் என்று அனைவரையும் மிரட்டி... அவ்வளவு ஏன்... வகுப்பில் படித்த ஒருவன் இவளிடம் ஏதோ சந்தேகம் கேட்க அவனை இவன் கொன்றே விட்டான்... இப்படி ரொம்ப தொந்தரவு செய்ய... அவனின் தொந்தரவு தாங்காமல் தான் படிக்கும் பொழுதே அந்த பொண்ணு வீட்டில் அனைத்தையும் சொல்லி அவ மாமா பையனை கட்டிகிட்டா... அதும் வீட்டு ஆட்களை மட்டும் கூப்பிட்டு வீட்டிலேயே கல்யாணம் ஆகிறுச்சு... அதை சற்றும் பொறுத்து கொள்ள முடியாத அந்த குமரன் அவளின் முதல் இரவு அன்று அந்த பையனை கொன்று விட்டு அவளின் அறையில் அவனுக்கு பதில் சென்று அவளின் வாழ்வை நாசமாக்கி விட்டான்... பாவம் அந்த பொண்ணு... அவனிடம் சண்டை போட்டு வெள்ள முடியாமல் தோற்று போய் அவனிடம் தன் வாழ்வை பரி கொடுத்து விட்டாள்... பின் இந்த விஷயம் அனைவருக்கும் தெரிய... அவளை அவளின் சொந்தங்களே வெறுக்க ஆரம்பித்தனர்... கட்டுணவன் தொடுறதும் அடுத்தவன் தொடுரதும் க்கும் வித்தியாசம் தெறில??? அது கூட ஒரு பொண்ணுக்கு தெரியாதா??? இல்ல கட்டுனவன் கிட்ட கேடச்ச சுகம் பத்தல என்று அவன் கூட படுத்து புல்லா பெத்துகிட்டாலா என்று ஊரில் இருந்த அனைவரும் அவர அவர் வாய்க்கு வந்த மாறி அவளை ஏச... அவள் கல்லூரி படிப்பை முடித்த உடன் யாருக்கும் சொல்லாமல் மாளதீவுகளுக்கு சென்று விட்டாள்... அவளின் கல்லூரி ஆசிரியர் தான் அவளுக்கு இந்த உதவி செய்தார்... அதை தெரிந்து கொண்ட அந்த ரௌடி அவரை மிகவும் கொடூரமாக கொன்றான்... கேட்டால் அவளை அவனிடம் இருந்து பிரித்து விட்டார் அதான் கொன்றேன் என்று காரணம் சொல்கிறான்... பின் அவனை போலீஸ் கைது செய்து 7 வருட சிறை தண்டனை கொடுத்து விட்டது... அவளும் வயிரில் 7 மாத குழந்தையுடன் இந்த ஊரை விட்டு சென்றால்... அவளின் அப்பா சாவுக்கு கூட அவளுக்கு விவரம் சொல்லியும் வரவில்லை... அந்த அளவுக்கு அனைவர் மேலும் கோபம்... அவளின் அம்மாவுக்கும் இப்ப முடியாமல் தான் இருக்கிறது... அவளின் தாய் செத்தாலாவது அந்த நல்ல பொண்ணு இங்க வரட்டும்... பாவம்... அவளுக்கு துணையாக அவளின் குழந்தை மட்டும் தான் இருக்கு... அந்த குன்னக்குடி முருகன் தான் அவளையும் அவள் பிள்ளையையும் காப்பாத்தனும்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now