Ep 47 UNALAE... UNAKAGAVAE...

134 10 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 47

தனம் முல்லை இருவரும் பேசி விட்டு அவரவர் அறைக்கு சென்றனர்...

முல்லை வருகைக்காக காத்திருந்த கதிர் முல்லை வந்ததும்...

சூரியனை கண்ட சூரியகாந்தி மலர் பூப்பது போல பூத்தார்...

முல்லை அவனின் அந்த மகிழ்ந்த முகத்தை கண்டு தனம் கூறியதை அவனிடம் சொல்ல தயங்கினாள்...

இருந்தாலும் வேறு வழி இல்லை... சாமி விஷயம் என்று மனதை கல் ஆக்கி கொண்டு...

முல்லை: மாமா... உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்...

கதிர்: நானும் தான்... என்று மிக சந்தோஷமாக சொல்ல...

முல்லை: சரி.. நீங்க முதலில் சொல்லுங்க...

கதிர்: இல்லை... நீ சொல்லு...

முல்லை: நீங்க முதலில் சொல்லுங்க மாமா... பின் நான் சொல்லுறேன்...

கதிர்: லேடீஸ் ஃபர்ஸ்ட்...

முல்லை: தலைவனுக்கு பின்னர் தான் தலைவி...

கதிர்: சரி... நானே சொல்றேன்...

முல்லை மிக ஆவலாய் அவன் அருகில் நெருங்கி அமர...

கதிர் அவள் முகத்தை பார்க்க வெட்க பட்டு அந்த பக்கமாக திரும்பி உட்கார்ந்தான்...

இது முல்லைக்கு புதிதாய் இருக்க அவளின் ஆவல் மேலும் அதிகம் ஆனது...

முல்லை: சொல்லுங்க மாமா...

கதிர்: நாம வரவேற்பு முடிந்து உடன் நாம் நால்வரும் ஷிம்லா போகிறோம்... அதும் ஒரு வாரம்...

முல்லை: அதற்கு ஏன் இவ்வளவு சந்தோஷம்???

கதிர்: என்ன டீ இப்படி கேக்குற???

முல்லை: இல்ல மாமா... நாம தான் ஏற்கனவே தேன் நிலவு கொண்டாடி விட்டோமே... மீண்டும்??? என்று தான் கேட்டேன்...

கதிர்: முல்லை... என்ன தான் நான் உனக்கு ஆசையாய் தாலி கட்டி உன்னோடு சேர்ந்து வாழ்ந்தாலும் இந்த உலகம் நம்மை அங்கீகரித்து நாம் ஒன்றாய் சேர்ந்து வாழ போகும் அந்த வாழ்க்கைக்கு தான் இந்த தேன் நிலவு... அது மட்டும் இல்லாமல் அனைவருக்கும் 2 ஆம் தேன் நிலவு போகும் வாய்ப்பு கிடைக்காது... என்று சொல்லி அவளை பார்த்து கண் அடிக்க...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now