Ep 66 UNALAE... UNAKAGAVAE...

131 9 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 66

கதிர் கட்டிட வேலைகளை பார்வையிட சென்று இருக்க...

அங்கே கட்டிடத்தின் மின்சார இணைப்பு கொடுக்கும் பணி நடைப் பெற்று கொண்டு இருந்தது...

அப்பொழுது ஒரு மின்சார கம்பி கீழே விழுக... அதை தெரியாமல் ஒரு பெண் மித்திக்க...

அவள் தூக்கி எரியப் பட்டால்...

அனைவரும் அவள் விழுந்த இடத்திற்கு ஓட...

அந்த பெண்ணிற்கு முதல் உதவி செய்து கொண்டு இருந்தான் அந்த ஆன் மகன்...

அவன் வெரு யாரும் இல்லை... நம்ம குருபாலன் தான்...

கதிர் அவனை கண்டு அதிர்ச்சி கொள்ள...

அவன் எதையும் கவினிக்கமல் அவளுக்கு முதல் உதவி செய்து அவளை காப்பாற்றினான்...

அவள் மூச்சு விட்டு சுய நினைவுக்கு வந்த பிறகு தான் இவன் அவளை விட்டு அகன்றார்...

சைட் என்ஜினீயர் வந்து அவளை திட்ட...

அப்பொழுது தான் அவள் யார் என்று கதிர் பார்த்தான்...

பார்த்தால் அது அந்த வானதி தான்... சுமதியின் தங்கை...

கதிர் அவர்கள் இருவரையும் அழைக்க...

சைட் என்ஜினீயர்: போங்க ரெண்டு பேரும்... சார் கூப்பிடுகிறார் ல... போங்க... என்று விரட்ட...

இருவரும் கதிரை நோக்கி வந்தனர்...

கதிர் பேச்சை எடுப்பதற்குள் அவனின் கைபேசி அடிக்க...

அதை பேசி முடித்து விட்டு இவர்களிடம் வந்தான்...

கதிர்: நீங்க ரெண்டு பேரும் எப்படி இங்க???

வானதி: எங்க அக்கா சிறைக்கு போனதாள எனக்கு யாருமே இல்ல... அப்படி இறுக்கப்ப ஒரு நாள் ஒரு குடிகாரன் இரவு நேரம் எங்க வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்ணி என்னை கெடுக்க முயற்சி செய்து நான் சத்தம் போட அக்கம் பக்கம் இருந்தவர்கள் வந்து என்னை காப்பாற்றினார்கள்... காலை ராமையா மாமா வீட்டுக்கு போய் நடந்ததை சொல்ல... அவரின் மகன் சிவபாலன் என்னை இழிவாக பேசி அனுப்பி விட்டார்... என்று சொல்ல சொல்ல அவள் கண்ணீர் சிந்தினால்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now