Ep 45 UNALAE... UNAKAGAVAE...

144 16 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 45

தனம் மூர்த்தி இருவரும் பூசாரி சொன்னதை நினைத்து கொண்டே வண்டியில் அமைதியாக வந்தனர்...

மூர்த்தி வீட்டில் லக்ஷ்மி அம்மா வனிதா அம்மா இருவரும் ஹாலில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்...

வண்டி சத்தம் கேட்டு வனிதா அம்மா எழுந்து வெளியே வர...

வீட்டிற்குள் நுழையும் பொழுது தனம் ஏதோ யோசனையில் செல்ல கால் தடுகியது...

வனிதா அம்மா: பாத்து வா மா என்று அவளை தாங்கி பிடித்தார்...

தனம்: ஒண்ணுமில்ல அம்மா... என்று பட்டும் படாமல் சொல்லிவிட்டு உள்ளே சென்றால்...

வனிதா அம்மா மனதில் இவளுக்கு ஏதோ குழப்பம் இருக்கு என்று மட்டும் தோன்றியது... ஆனால் அதை கேட்கலாமா வேண்டாமா என்ற யோசனை ஒரு பக்கம், பூசாரி என்ன சொன்னார் என்ற யோசனை ஒரு பக்கம் அவரை வாட்டி வதைத்தது...

வனிதா அம்மா: மாப்ளை...

மூர்த்தி: சொல்லுங்க அத்தை...

வனிதா அம்மா: போன காரியம் என்ன ஆச்சு??? பூசாரி என்ன சொன்னாரு???

மூர்த்தி தனத்தை பார்க்க தனம் மூர்த்தியை பார்க்க இருவரும் என்ன சொல்வது என்று அமைதியாய் இருந்தனர்...

லக்ஷ்மி அம்மா: யாராச்சும் ஒருத்தர் சொல்லுங்க... இப்படி அமைதியாக இருக்குற அளவுக்கு என்ன ஆச்சு???

மூர்த்தி அனைத்தையும் சொல்ல...

லஷ்மி அம்மா வனிதா அம்மா இருவரும் மணம் கலங்கினர்...

லக்ஷ்மி அம்மா: அம்மாடி தனம்... உன் மேல நம்ம குல தெய்வம் ஒரு முறை வந்து இருக்கு... அதனால் உன்னை அந்த கெட்ட சக்தி ஒன்றும் செய்ய வாய்பில்லை... இருந்தாலும் அந்த எலுமிச்சை பழம் எபொழுதும் உன்னோடு இருக்குற மாறி பாத்துகோ... அது தான் நம்ம குடும்பத்துக்கு பாதுகாப்பும்...

தனம்: சரிங்க அத்தை...

வனிதா அம்மா: மாப்ள... இதுக்கு எதும் பரிகாரம் இருக்க???

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now