Ep 88 UNALAE... UNAKAGAVAE...

53 2 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 88

பாலன்: வாழ்நாள் தண்டையா என்று கேட்க...

கதிர்: ஆமா... இங்கேயே இரு... இதோ வருகிறேன்... என்று சொல்லி வெளியே சென்றான்...

வெளியே வந்து எழிலுக்கு phone செய்தான்...

கதிர்: என்ன எழில் அக்கா... சிசீரா எழுந்து விட்டாளா???

எழில்: எங்கே தம்பி தூங்கினால்... அவளும் உரங்கவில்லை... எங்களையும் உறங்க விட வில்லை... அவரின் தாய் நல்ல படியாக இருக்கிறார் என்று நீங்கள் சொன்ன பிறகு தான் படுக்கவே சென்றால்... எழுபவா???

கதிர்: வேணாம் அக்கா... அந்த பாலனை பற்றி என்ன நினைக்கிறீர்கள்???

எழில்: யார் பா???

கதிர்: அதான் அந்த ராமையாவின் மகன்...

எழில்: அதான் அவனுக்கு கல்யாணம் ஆகிருச்சு இல்ல தம்பி???

கதிர்: அது சின்னவன் கா... நான் கேக்குறது பெரியவன் அக்கா...

எழில்: ஹ்ம்ம்... நல்லவன் தான் தம்பி... பாவம்... குரங்கு கை பூமாலை போல ந்த கெட்டவன் கையில் சிக்கிய நல்ல பொம்மை தான் அவன்... ஏன் பா...

கதிர்: சரி அக்கா... நான் பிறகு கூப்பிடுறேன்... என்று சொல்லி அணைத்தான்...

எழில்: எதுகாக தம்பி இப்ப phone பண்ணுச்சு??? எதுக்காக அவனை பற்றி கேட்டுச்சு??? எதுக்காக உடனே வெச்சுறுச்சு??? என்ன ஆச்சு கதிருக்கு தீடீரென??? சரி... எனமோ... எல்லாம் அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்...

பாலன் கதிரையே பார்த்து கொண்டே இருக்க...

கதிர்: என்ன பாக்குற???

பாலன்: ஏதோ வாழ்நாள் தண்டனை என்று சொன்னீங்க??? என்ன தண்டனை??? தண்டனை ரொம்ப கடுமையாக இருக்குமா??? ஆமா அதில் இருந்து எனக்கு எப்பொழுது விடுதலை கிடைக்கும்??? என்று தயங்கி தயங்கி சற்று பயந்து கொண்டே கேட்க...

கதிர்: ஆமா... கொஞ்சம் கடுமையாக தான் இருக்கும்... ஆனால் இந்த தண்டனை கிடைத்தால் விடுதலை என்ற பேச்சுக்கே இடம் இல்லை... மேலும் இதில் நீ விட்டுக்கொடுத்து சென்றால் வெற்றி உனக்கு நிச்சயம் கிட்டும்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now