Ep 43 UNALAE... UNAKAGAVAE...

158 11 2
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 43

காலை பொழுது விடிந்தும் யாரும் எழ வில்லை...

கடை திறக்கும் நேரமும் கடந்து விட்டது...

குமரேசன் மாமாவும் சரவணனும் வீட்டிற்கே வந்து கதவை தட்ட...

மீனா தான் வந்து கதவை திறந்தாள்...

மீனா: வாங்க சித்தப்பா... எப்படி இருக்கீங்க??? என்ன இவளோ நேரமே வந்து இருக்கீங்க???

குமரேசன்: எது??? நேரமாவா??? மணி என்ன ஆகுது தெரியுமா???

மீனா அப்பொழுது தான் மணியை பார்க்கிறாள்...

பார்த்தால் மணி எட்டு...

மீனா: அடக்கடவுளே இவ்ளோ நேரம் தூங்கிட்டோம்??? என்று நினைத்து அனைவரையும் எழுப்பி விட்டாள்...

அனைவரும் எழுந்து ஹாலுக்கு வர மீனா அனைவருக்கும் டீ போட்டு கொண்டு வந்தால்...

மூர்த்தி: என்ன மாமா... நீங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க... என்ன விஷயம்...
எலேய் சரவணா நீ கடைக்கு போலயா...

சரவணன்: இல்ல அண்ணா... இன்னைக்கு தான் அவரோ அடக்கம் செய்ய போறாங்களாம்...

11 மணி அளவில் ஊர்வலம்... பதினோரு மணிக்கு அப்புறமா கடை திறக்க சொல்லிட்டாங்க... நான் வீட்டுக்கு போறேன் என்று சொன்னேன்... தாத்தா தான் இங்கே கூட்டிட்டு வந்தரு... அதான் வந்துட்டேன்...

தனம்: சரி இருங்க எல்லாரும் சாப்பிட்டு 12 மணிக்கு கடைக்கு போகலாம்...

குமரேசன் மாமா: தனம் உன் கையால சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு... நல்ல ருசியா செஞ்சு ஒய் மா... இன்னைக்கு ஒரு பிடி பிடித்து விட்டு தான் கடைக்கு நாங்க போகணும்...

தனம் அதுக்கு என்ன சித்தப்பா... விடுங்க ஜமாய்ச்சுடலாம்...

கண்ணன்: அண்ணி... இதே மாதிரி நாங்க டெய்லி சாப்பிட்டோம் அப்புறம் அவ்வளவுதான் பார்வதி அத்தை மாதிரி ஆயிடுவோம்...

கதிர்: டேய்... குண்டா இருந்தா தப்பே இல்லடா... குண்டா இருக்கவங்க தான் ரொம்ப ஆரோக்கியமானவர்கள்... தெரியுமா... ஒல்லியா இருக்குறவங்க உடம்புல சக்தி இருக்காது...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now