Ep 60 UNALAE... UNAKAGAVAE...

151 12 2
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 60...

காலை பொழுது விடிந்தது... அனைவரும் எழுந்து குளித்து விட்டு அவர் அவர் வேலைகளை செய்ய...

மீனா அனைவருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்தாள்...

அனைவரும் டீ குடித்து கொண்டு இருக்கும் பொழுது கண்ணன் டிவி போட...

செய்திகளை வைத்தான் கைலாஷ்...

மூர்த்தி: என்ன டா அதிசயமா சித்தப்பணும் பையனும் டிவி போற்றுகீங்க??? அதும் காலைலயே நியூஸ் வேற என்று கேலி செய்ய...

கைலாஷ்: அப்பா மழை வர மாறி இருக்கு ல... அதான் இன்னைக்கு ஸ்கூல் லீவ் விடுறாங்களா என்று பார்க்கிறேன்...

ஜீவா: சரி... நீ ஏன் டா அவன் கூட சேர்ந்து பாக்குற??? என்று கண்ணனை கேட்க...

கண்ணன்: ஏன் லீவ் விட்டா ஆண்களுக்கு மட்டும் விட்றாங்க??? நாங்களும் படிக்கிற பிள்ளைகள் தானே??? எனகளுக்கும் விட்டால் என்ன??? என்று கேட்க...

தனம் அவன் தலையில் கொட்டி...

தனம்: பிள்ளைங்க என்று சொல்ல... படிக்கிற பிள்ளைங்க என்று சொல்லாத... நீ ஒரு நாலாவது அந்த புஸ்தகத்தை எடுத்து படித்து இருக்கியா???

கண்ணன்: படிச்சா தான் ஒத்துப்பீங்களா???

மீனா: ஆமா...

கண்ணன்: நான் எத்தன நாள் காலைல எழுந்து படித்து இருக்கேன் என்று உங்கள் யாருக்கச்சும் தெரியுமா???

மீனா: நீ படித்தால் தானே தெரியும் எங்களுக்கு???

கண்ணன்: உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை அண்ணி... அம்மா ஐ கேளுங்க... ஏன் அம்மா... உங்களுக்கு தெரியாதா???

லட்சுமி அம்மா: அவன் படிப்பான் மா... வாரத்துல 8 நாள் படிப்பான்...

அனைவரும் சிரிக்க...

கண்ணன்: என்ன அம்மா... வாரத்துக்கு இருக்கிறதே 7 நாள் தான் நீங்க 8 நாள் என்று சொல்றீங்க???

லட்சுமி அம்மா: அப்படி என்றால் நீ தினமும் படிக்கிற என்று அர்த்தம் டா...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now