Ep 96 UNALAE... UNAKAGAVAE...

77 6 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 96

ஜனா: அம்மாடி முல்லை... விடு மா... வேண்டாம்... அவள் தாங்க மாட்டாள்...

முல்லை அவர்கள் சொன்ன எதையும் காதில் வாங்கி கொள்ள வில்லை...

மேலும் தொடர்ந்தால்...

முல்லை: பிறகு... அவருக்கு மிகுந்த அவமானம் ஏற்படவே... என்னை நீ அவமானம் படுத்தீட்ட... அதற்க்கு நீ மட்டும் இல்லை... உங்கள் முழு குடும்பமும் எனக்கு கண்டிப்பாக பதில் சொல்லி ஆகனும்... நினைவில் வைத்து கொள்... நீ என் காலில் வந்து விழுந்து கெஞ்சுவ... என்று சவால் விட... அப்பா உன்னால் முடிந்ததை செய்து கொள்... இப்போ வெளியே போ என்று புடனியை பிடித்து வெளியே தள்ள... அவர் கீழே விழுந்தார்... அப்பொழுது நீங்களோ விளையாட்டாக அவரை பார்த்து சிரிதீர்கள்... அது அவருக்கு மேலும் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்த உங்களை முறைத்து விட்டு சென்றார்...

பேச்சி: ஆமா... அவர் கீழே விழுந்த பொழுது நான் விளையாட்டுக்கு தான் சிரித்தேன்... ஆனால் அவர் அப்போது என்னை பார்த்த பார்வை மிகுந்த கோபம் நிறைந்ததாக இருந்தது... அதற்க்கு பிறகு ஒரு நாள் அவரை நான் தென்னத்தோப்பில் அவரின் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து கொண்டு இருக்கும் பொழுது பார்த்தேன்... பிறகு அவரை பார்த்த நியாபகம் இல்லை... ஏன் அதை கேட்கிறாய்???

முல்லை: ஆம்... அங்கே அந்த தோப்பில் அவரின் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து கொண்டு இருக்கும் பொழுது நீங்களும் உங்கள் தோழி ராணியும் அங்கே தோப்பில் வழியே சென்றீர்களே... நினைவு இருக்கா...

பேச்சி: ஆம்... அந்த வழியாக கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி கொண்டு இருந்தோம்...

முல்லை: அங்கே அவருடன் பேசியது நடந்தது எதுவும் நினைவு இல்லயா???

பேச்சி யோசிக்க...

முல்லை: அவரை பார்த்தும் நீங்கள் இருவரும் அவரின் நிலை அறிந்து கண்டு கொள்ளாமல் போக... அவரின் நண்பர்கள் உங்கள் இருவரையும் பார்த்து விட்டு துரத்தினர்... மது போதை தலைக்கு ஏறிய அவர்கள் கையில் அக பட்ட நீங்கள் இருவரும் அவர்களின் காம பசிக்கு இரையாக... அப்பொழுது அவர்கலிடம் முரண்டு பிடித்த உங்கள் இருவரையும் அருகில் இருந்த கல்லை கொண்டு தலையில் அடிக்க... உங்கள் தோழி அந்த இடத்திலேயே... பாவம்... இறந்து விட்டார்... நீங்கள் மயக்கம் ஆகி விட்டீர்கள்... ஆனால் அது கூட தெரியாமல் அவர்கள் உங்களை நாசம் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்... போதையில் செல்லும் வழி எங்கும் உங்களை அவர்கள் நாசம் செய்ததை பற்றி உலரி கொண்டே அவர்கள் செல்ல... அவர்களை கடந்த சென்றவர்கள் அரசால் புரசலாக கேட்டு விட்டு அப்பாவிடம் சொல்ல... அனைவரும் உங்களை தேடி கண்டு பிடித்து மருத்துவ மனையில் சேர்ந்தனர்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now