Ep 85 UNALAE... UNAKAGAVAE...

100 6 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 85

சிவா சக்தி செய்து கொடுத்த மருந்தை நாள் தோறும் மீனா உண்டு வர...

24 நாட்கள் கணக்கு முடிந்த நிலையில் 26 ஆம் நாள் மீனா ஜீவா இருவரும் சென்று மருத்துவ மனையில் பரிசோதனைகளை செய்தனர்...

மீனாவின் பரிசோதனை முடிவுகள் அடுத்த நாள் வர...

ஜீவா மீனா இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர்...

மீனாவை முழுமையாக பரிசோதித்த மருத்துவர்...

ஜீவா: இப்ப எப்படி இருக்கா டாக்டர் மீனா???

மருத்துவர்: மீனா நல்லா இருக்காங்க... ஒரு பிரச்சனையும் இல்லை... நான் கொஞ்சம் சத்து மாத்திரைகளை எழுதி தாரேன்... அதை மட்டும் எடுத்துக்கோங்க... போதும்...

மீனா: சரி டாக்டர்...

மருத்துவர்: ஹ்ம்ம்... சரிங்க மீனா... நீங்க கொஞ்சம் வெளில வெயிட் பண்ணுங்க... உங்க கணவர் கிட்ட கொஞ்சம் பேசணும்...

மீனா சற்று கோபம் கொண்டு...

மீனா: அதென்ன என்ன பத்தி என் கிட்ட சொல்லாம எப்ப பாரு அவன் கிட்டயே சொல்லுறீங்க... அவன் வாயே திறக்க மாடெங்குரான்...

ஜீவா: ஏய்... சொல்லுறேன்... போடி... என்று கோபம் கொள்ள...

மீனா: அதெல்லாம் முடியாது ஜீவா... அவங்க என்ன பத்தி சொள்ளுறதை என் முன்னாடியே சொல்லட்டும்... என்ன கொரஞ்சு பொய்ற போகுது???

ஜீவா: சொன்னா கேளு மீனா... நான்.......

மருத்துவர்: விடுங்க ஜீவா... எண்ணைக்கா இருந்தாலும் அவங்களுக்கு தெரியா போற உண்மை தான் இது... அது இன்று தெரிந்து விடட்டும்... இதை தெரிந்து கொண்ட பின்னராவது அவர் கவனமாக இருப்பார் ல...

மீனா: நான் கவனமாக தான் டாக்டர் இருக்கேன்... நான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்றால் நான் என் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருகணும்... அது தான் ஒரே வழி... ஹ்ம்ம் என்று சொல்லி உதட்டை சுழிக்க...

மருத்துவர்: அது தான் நானும் சொல்ல வந்தேன்... என்று சிரித்து கொண்டே சொல்ல...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Where stories live. Discover now