Ep 30 UNALAE... UNAKAGAVAE...

219 17 0
                                    

UNALAE... UNAKAGAVAE...
Ep 30

ரைட் கொடுத்ததை வாங்கிய கலைவாணி அனைத்து அறைகளிலும் வைக்க சரியான நேரம் பார்த்து கொண்டு இருந்தார்...

அப்பொழுது தான் ஜனா பேச்சி இருவரும் ஹாலில் அமர்ந்து மூர்த்தி குடும்பத்தை பற்றி பேசும் சத்தம் கேட்டது...

கலைவாணி அவர் அறையில் இருந்து மெதுவாக வெளியே வந்து அவர்கள் பேசுவதை கேட்க வந்தார்...

கலை: (MV) இந்த ஆள் எப்ப முருங்க மரம் எருவான் எப்ப எறங்குவான் என்றே கண்டு பிடிக்க முடியல... இதுல கூட்டு களவாணி வேற... என் வேலை சிபிஐ ஐ விட ரொம்ப ரகசியமாக இருக்கணும் போலய... எல்லாம் நம்ம பொண்ணுங்களுகாக பொறுத்துதான் ஆகனும்...

ஜனா: ஆத்தா பேச்சி... நீ கொஞ்சம் கூட மாறவே இல்ல மா...

பேச்சி: எப்படி அன்னே நான் மாருவேன்??? நல்லா இருந்த என் வாழ்க்கையில் வந்தார் ஜெயராமன்... அவரை சேர நினைத்த எனக்கு பதில் சொன்னாள் அந்த கிழவியும் அவள் குடும்பமும்... என் ஆசையில் மன் அள்ளி போட்டால் அந்த தேவி... மூதேவி... அவன் வாழ்வில் அவள் ஸ்ரீதேவி யாக இருக்கலாம்... ஆனால் அவள் எனக்கு எப்பொழுதுமே மூதேவி தான்... நல்லா வாழ வேண்டிய என்னையும், நல்லா இருக்க வேண்டிய என் வாழ்க்கையையும் கெடுத்த அவங்கள நான் சும்மா விட மாட்டேன்... நான் புலி அன்னே... பதுங்கி தான் இருந்தேன்... பாயுற நேரம் வந்துருச்சு... நல்லா நேரம் நம்மக்கு அமையுரப்ப அவங்க மேல பாஞ்சு என் வாழ்க்கையை அவங்க எப்படி நாறு நாறா ஆகுநாங்களோ அதே மாறி அவங்கள நாரு நாரா கிழிப்பேன்... அது வரைக்கும் எனக்கு ஓய்வு இல்லை அன்னே...

ஜனா: நீ என்ன வேணும்னாலும் செய்... உன் அண்ணன் நான் இருக்கேன் உன் கூட...

பேச்சி இந்த வார்த்தைகளை கேட்டு சற்று கலங்கினார்...

இதே வார்த்தைகளை முதன் முதலில் பேச்சி செய்த கட்ட பஞ்சாயத்துக்கு ஜனா சொன்னது... அதை நினைவுகூர்ந்தார் பேச்சி...

மூர்த்தி ஏதோ பணம் எடுக்க வீட்டுக்கு வந்தார்...

அப்பொழுது எல்லாரும் வீட்டில் இருப்பதை கண்டு மகிழ்ந்து அவர்களிடம் பேசி கொண்டு இருந்தார்...

பாண்டியன் ஸ்டோர்ஸ்...Où les histoires vivent. Découvrez maintenant