வா.. வா.. என் அன்பே - 1

3.2K 38 4
                                    

பகுதி -1

சங்கம் வளர்த்த மாநகரம்...
தமிழ் பெருமை உயர்த்தி
சொல்லும் மாநகரம்....
மல்லிகை மணம் நிறைந்த
மாநகரம் - மதுரை மாநகரம்...

மதுரை என்றால் மீனாட்சியம்மன் கோயிலுக்கு மட்டுமல்ல தமிழ்நாடு டாஸ்மாக்கிலும் முதல் இடம் என்பதும் பலருக்கு ஞாபகத்திற்கு வரும் என்பதில் ஐயமில்லை . மதுரை எல்லீஸ் நகரில் இருக்கும் டாஸ்மாக் பார் ஒன்றில் ,

" ஸார்... பார் க்ளோஸிங் டைம் ஸார்.." , என்று உள்ளடங்கிய குரலில் அங்கு பணிபுரியும் பணியாள் வெளியிட ,

" அப்படியா.." என்று எந்த கவலையும் இல்லாமல் முழு போதையில் தன் க்ளாஸை நிரப்பிக் கொண்டிருந்தவனை வெளியே அனுப்பும் வழி தெரியாமல் தடுமாறி நின்றிருந்தான் , அந்தக்கடை ஊழியன். அதையே மீண்டும் அவன் உறைக்க ,

" டேய்... இப்ப எதுக்கு டா.. திரும்ப திரும்ப சொல்லீட்டு இருக்க.. க்ளோஸிங் டைம்னா.. மூடிட்டுப் போடா... என்னை ஏன்டா தொந்தரவு பண்ற... " என்று அவனை அடிக்க எழுந்தவனால் முடியாமல் தடுமாறி மேஜை மீதே விழுந்தவன் , முழு போதையில் இருந்தான்.

அள்ளி அள்ளிக் கொடுத்தவன் என்பதாலோ என்னவோ ? மணிக்கணக்காக நேரம் காலம் பாராமல் குடிக்கும் இவனிடம் சற்று கரிசனம் நிறைந்திருந்தது அவனுக்கு..

தன் உள்ளங்கையால் வியர்த்து வழியும் முகத்தை துடைத்தவனுக்கு குடிக்கும் சோமபானம் போதவில்லை போல... தன் சட்டையின் கழுத்துக் காலரை பிடித்திழுத்து மீண்டும் தன் முகத்தை துடைத்து ,

" டேய் அந்த கருமத்த எடுடா... சும்மா நொய்.. நொய்..ன்..னு... நிம்மதியா குடிக்க விடாமப்படுத்துது " , என்று விடாமல் அலறிய அலைபேசியை காண்பித்து எரிச்சலாக கூற இல்லை குழற ,

" ஸா..ர்... அது உங்க போன் ஸார்... " என்று மென்று முழுங்கியவனாக கூறினான் அந்த வாலிபன்‌.

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now