பகுதி - 86
அவளது புகைப்படமாகவே இருந்த போதிலும் , காலையில் கைபேசியில் பார்த்ததற்கும்.. இப்பொழுது , பிரம்மாண்டமான.. பெரிய திரையை முழுவதிலும் ஆக்கிரமித்திருப்பதை காண்கையில் , பெரும் வியப்பு.. அதனோடு.. அன்று தாமரை காணத் தவறிய சரணின் மோகம் நிறைந்த பார்வையும் , வளைத்திருந்த கரத்தின் இறுக்கத்தில்.. இன்று , மூச்சு முட்டும் உணர்வு ஏற்பட்டவளாய்.. தடுமாறிக் கொண்டிருந்த பொழுதில் ,
" ஓ.. சரி விடுங்க.. லவ் ஸீக்ரெட்.. அதுக்குள்ள நாங்க வரலை.. " என்று இடையிட்டு இருந்தாள் தொகுப்பாளினி .
" இந்த.. போட்டோஸ் பாருங்க..", என்று கூறவும்.. மீண்டுமாக தாமரை திரும்பி பார்க்க.. சரணின் பழைய புகைப்படமும்.. தற்போதைய ஒன்றுமாக இருந்தது.. பத்து ஆண்டுகளுக்கு முன்பாக உதட்டில் மட்டுமல்லாது கண்களாலும் சிரித்து முகத்தில் ரோமங்கள் அற்றவனாய் மொழு மொழுவென இருந்ததும்.. மற்றொன்றிலோ , பார்வையில் கூர்மையும் இதழ்களில் அளவான ஒட்ட வைத்த புன்னகையுடனும் அலுவலக ஆடையில் கம்பீரமாய் இருந்ததுமாக இருக்க..
" சொல்லுங்க தாமரை மேம்.. உங்களுக்கு எந்த மித்ரனை ரொம்ப பிடிக்கும்.. அமுல் பேபியா.. இல்லை டெரர் பீஸ்ஸா..", என்று சிரிக்க
" அச்சோ.. இப்படி எல்லாம் கேட்குறீங்களே.. ", என்று குரலே வராமல் கூறியவளாய்.. அலைபாய்ந்து அவனை ஏறிட.. ம்ஹூம்.. அதே அசைவற்ற சிலையாக அமர்ந்திருந்தான்.
" அட.. இதுதாங்க எங்க வேலை.. மக்களே நீங்க சொல்லுங்க.. நான் கேட்டது சரி தான.. மக்கள் கூட்டத்தை பார்த்தவளாய் ", கேட்டு அப்பெண்மணி சிரிக்க..
மென்குரலில் " எப்படி இருந்தாலும் பிடிக்கும்.. ", என்றாள் .
" ஆங்.. அது எங்க எல்லாருக்குமே உண்டானது . உங்களுக்கு அவர் ஸ்பெஷல் இல்லையா.. ",
இதழ் கடித்து தடுமாறும் அழகு.. புது சுவாரஸ்யத்தைக் கொடுக்கவே ,
" சரி போனாப் போகுது. ரொம்ப பயப்பட வைக்க வேண்டாம் .. நீங்க கண்ணால மட்டும் எதுன்னு காட்டுங்க.. நான் உங்க சார்பா சொல்றேன் ..",
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...