வா.. வா.. என் அன்பே - 22

2K 32 6
                                    

பகுதி - 22

அமைதியாக.. படுக்கையில் விழுந்தவனின் மனதில்.. மான்சியின் நினைவுகளே..

தரையில் தங்களின் முதல் இரவை கொண்டாட விரும்பாதவளாய்.. தனியார் விமானத்தை ஏற்பாடு செய்திருந்தாள்.. அத்தனை ஆசை கனவு ஏக்கங்கள் என்று நெஞ்சில் புதைத்து கூறியவளின் வார்த்தைகளில் துளியளவு பொய்மை கலந்திருக்கும் என்று இந்த நிமிடம் வரை நெஞ்சம் ஏற்கவில்லை என்று உண்மையையும் ஏற்க முடியாமல் அதேசமயம்.. நிஜம் கூறுவது வேறாக இருக்கவே.. அதையும் ஏற்க முடியாமல் இருப்பதும், அதனால் ஏற்படுத்தும் வலியையும் மறைக்க முடியாமல் தடுமாறிப் போனான்.

மான்சியின் மீதான் கோபம்.. தாமரையிடத்தில் வெளிப்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.. தான் தாலிக்கட்டிய நொடி.. அவள் கண்களில் இருந்து உருண்டு விழுந்திருந்த கண்ணீர் துளிகளால் அவன் ஆத்திரம் அதிகரித்திற்கு காரணமாக.."எதுக்கு இவ அழறா.. நான்தான இவ கழுத்துல தாலி கட்றதுக்கு அழுகனும்.. " என்று எண்ணியவனாய் இருந்தவனுக்கு.. கோபத்தை அதிகம் உண்டு பண்ணுவது போல்.." சீரோடும் சிறப்போடும்.. ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து.. புரிஞ்சு நல்லபடியாக சந்தோஷமாக வாழணும்.." என்ற பெரியவர்களின் ஆசீர்வாத வார்த்தைகள்.. அதற்கு தாமரையின் தலையாட்டல் வேறு..

போதாக்குறைக்கு.. புகைப்படக் கலைஞர் செய்த அலுச்சாட்டியம்.. அதைவிட.. அவனை தீண்டுவதையே பாவச் செயல் போல் பட்டும் படாமலும் இருந்த அவளின் நடவடிக்கை.. மேலும் சிடுசிடுப்பை அதிகரித்திருக்கவே, கொதிநிலையில் இருந்தவனுக்கு மூலையில் படுத்துறங்கும் தாமரையை.. கண்டவனுக்கு எழுப்பும் எண்ணமும் இல்லை..

மணி நான்காகியும் இருவரும் கீழே இறங்கி வந்திருக்கவில்லை.. அதற்கு மேல் பொறுக்காதவராய் அன்னப்பூரணி விக்கியின் உதவியை நாட.. 'அய்யோ.. நானா..', என்று உள்ளுக்குள் அலறியவன்.. "இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டுமே ..", என்று கெஞ்சியவனை கண்டுக் கொள்ளதான் அங்கே ஆள் இல்லாமல் போனது..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now