வா.. வா.. என் அன்பே - 106

1.4K 49 19
                                    

பகுதி - 106

வானில் நட்சத்திரங்களின் ஊர்வலம் தெளிவாக தெரிய துவங்கிய பின்பும் ஆரவ் தங்களின் வீட்டுக்கு திரும்பி இருக்கவில்லை .  தாமரைக்கு தங்க அறையை காட்டியதும் நுழைந்தவள் தான்.. இரவு உணவு அருந்தவும் வெளி வர வில்லை . இன்னும் , எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எந்த சூழ்நிலையையும் தன்னால் தனித்து சமாளிக்க தெரியாது.. முடியாது என்பதை முழுமையாக புரிந்த தருணமாக நினைத்து உள்ளங்கையில் வைத்து இருந்த அலைபேசியையே வெறித்தவளாக , மான்சி அமர்ந்து இருந்தாள் ‌ .

இருபது முறைக்கு மேல் ஆரவ்விற்கு அழைத்த பின்பும் , மான்சிக்கு தொடர்பு கொள்ள இயலவில்லை , ' ஸ்டுபிட்.. மொபைல ஒழுங்கா சார்ஜ் போட்டே வைக்க மாட்டான்.. இவனுக்கு எதுக்கு செல் ஃபோன்னு தெரியலை..", என்று தனக்குள் எழும் பதற்றத்தை.. அவன் மீது பலி சுமத்தியவளாய் இருந்தவள் , இரண்டு சாப்பாத்திகளை வயிற்றுக்குள் தள்ளி , பழசாறுடன் ஆர்வ் வரவிற்காக காத்து இருக்க துவங்கினாள் .

வீட்டின் நிசப்தத்தை கிழித்து , அவளுடைய அலைபேசி இசைக்கவும் , அவசரமாக அழைப்பை ஏற்றவளோ , ஹலோ என்றும் விழும்பாது , " ஆரவ்.. உங்களுக்கு எத்தனை தடவை கால் பண்றது. ஏன் , நாட் ரீச்சபிள்லையே இருக்கு..", என்று பொறிந்து தள்ள..

எடுத்ததும் இப்படிப்பட்ட வெளிப்பாட்டை அவளிடம் இருந்து கிடைக்கும் என்று நினைக்காதவன் , வியப்பில் ஆழ்ந்த போதும் ,  " வாவ்.. வாட் எ சர்ப்ரைஸ் பேபி.. என்னோட , பேச இவ்வளவு ஆர்வமா இருந்து இருக்க.. இது தெரியாம நான் ஸ்விட்ச் ஆஃப் பண்ணீட்டேனே..", என்று குதூகலத்துடன் ஆரவ் குரல் ஒலித்து இருந்தது .

" ம்ச்சு.. ", என்று சலிப்புடன் ஒலி எழுப்பி இருந்தாள் அவனது மனையாள்..

அதனை கண்டுக் கொள்ளாது , "சொல்லு பேபி.. அப்படி என்ன முக்கியமான விஷயம்..", என்று முகத்தில் அரும்பிய குறுஞ்சிரிப்பு மாறாதவனாய் , தன் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டவாறே , மனைவியுடன் பேச்சில் ஈடுபட்டு இருக்க..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now