பகுதி - 53
தாமரையுடன் , பேசிய பிறகு தீவிர சிந்தனை வயப்பட்டவனாக ஆரவ் அசையாமல் நின்றிருக்க.. மான்சியின் வருகையும் அவனை கலைக்கவே இல்லை . அவளது அலைபேசி , அவன் கரத்தில் இருப்பதைப் பற்றி கொஞ்சமும் வருந்தாதவள்.. முகம் இறுக, நின்றிருந்தவனின் கலவையான வெளிப்பாட்டிற்கான காரணம் அறிய வேண்டியிருந்ததால் , மென்மையாக.. அவன் கரத்தில் இருந்து கைப்பற்றியவளாய்.. யாரென பார்க்க அது தாமரையுடையதாக இருக்கவும் , மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்து..
" மார்னிங்கே.. உன்னை உண்டு இல்லைன்னு பண்ணீட்டாளா.. என்ன சொன்னா.. ஏன் என்கிட்ட சொல்லாம மேரேஜ் பண்ணீங்கன்னு சண்டை போட்டாளா.. இல்லை.. ஏன் மேரேஜ் பண்ணிக்கிட்டனு சண்டை போட்டாளா..", என்று கேட்டுக் கொண்டிருக்க.. ஆரவ்விற்கு , மான்சியின் வருகையே உணராத போது , அவள் எழுப்பும் கேள்விகளுக்கு எங்கிருந்து பதில் கிடைக்கும் .
ஆரவ்வின் கவனம்.. அவளிடத்தில் இல்லாததை கவனித்தவள்.. "ஆரவ் , என்னாச்சு..", என்று சந்தேகமாய் கேட்க..
" ம்.. நத்திங்.. வா..", என்று நகர்ந்திருக்கவும்.. மான்சியோ , அழுத்தமாக நின்றிருந்தாள் . அவள் வராததை கவனித்தவன்..
" ஏன் அங்கேயே நின்னுட்ட வா..", என்று அழைக்க..
" தாமரை பேசினாளான்னு கேட்டேன்..", என்று அழுத்தம் கூடியவளாய்..
" ம்.. ", என்று உள்ளடங்கிய பதிலையே கொடுக்க..
" ரொம்பவே திட்டினாளோ.. ", என்று மெல்லிய கோபம்.. அது எப்படி அவள் திட்டாலாம்.. என்ற மெல்லிய உரிமையும் வெளிப்படுத்திருந்தால் போலும்..
ஆனால் , அவனுக்கு.. அதை கவனிக்கும் அளவிற்கு மனம் தெளிவில்லாமல் இருந்ததில் , "ம்ஹும்..", என்றான் .
" அப்புறம்..",
" அதிகமா வருத்தப்பட்டா.. அவளை பற்றி நினைக்கவே இல்லைன்னு சண்டை போட்டா..", என்று முகம் கசங்க.. கூற..
எதிர்ப்பார்க்காத பதிலாக இருக்கவும்.. விரைந்து நெருங்கியவளாய்.. " என்ன.. என்ன சொன்னா..", என்று பதற்றத்தை வெளியிட..
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...