வா.. வா.. என் அன்பே - 74

1.7K 41 11
                                    

பகுதி - 74

காலத்தின் வேகத்திற்கு முன் நாம் அனைவரும் பார்வையாளர்களே.. ஏன்.. அதனுடைய பொம்மைகள் என்றும் சொல்லலாம் . நமக்கான விருப்பத்திற்கு இடமே கிடையாது.. இருந்தபோதும் , அதன் சுழற்சிக்குள் நாமும் சுழன்றுக் கொண்டே இருப்போம்.. அதுவும் , சுழற்ற வைத்துவிடும் .

நேற்று போல் இருந்தது.. ஆனால் , மூன்று மாதங்கள் , சொடுக்கிடும் மணித்துளிகளுக்குள்ளாக.. கடந்து இருக்க.. அவன் கைச்சிறைக்குள் பகல் என்று பாராமல் கட்டுண்டு கிடந்ததே தாமரையின் நினைவில் எழுந்து ஆட்டுவித்ததாய் .

இரவு பகலும் போல் இன்பமும்.. துன்பமும்.. சூரியன் சந்திரன் போல் கோபமும் தாபமும்.. இந்த உவமை எவ்வளவு உண்மை என்றே நினைத்தவளாக இருண்ட வானில் ஒற்றை நிலவை தேடியவளாய்‌.. தன் மார்பில் கரங்களை கட்டிக் கொண்டு பால்கனியில் நின்றிருந்தாள் தாமரை .

வெளிர் நிற இரவுடையில்.. நின்றிருந்தவளின் தோற்றமோ.. எண்ணில் அடங்கா சோகத்தை தனக்குள் பொதித்தது போல் இருக்க ‌ . மூன்றே மாதத்தில்.. மூவாயிரம் மாற்றங்கள் தன் வாழ்க்கையில் அரங்கேறி இருப்பதை நினைத்து மகிழவும் முடியாமல்.. தன்னவனில் நினைவால் மனம் வெதும்பியவளாக தன்னித்து நின்றுக் கொண்டிருகிறாள் ‌ அவள்..

உறங்குவதற்கும் நேரம் கிடைத்திருக்கவில்லை . மூச்சு முட்டும் அளவிற்கு வேலைகளும் பொறுப்புக்களும் அவளை இழுத்துக் கொண்டதில்.. திண்டாடியே இருந்தாலும் சரணின் மௌனத்தை நினைத்து கலங்குவதற்கு இடம் இல்லாமல் இருப்பதும் மனதிற்கு இதமாகவே இருந்தாலும் கூட.. அலைபேசியின் , அழைப்பையும் ஏற்க மறுத்துக் கொண்டிருக்கும் தன்னவனின் செயலால் அதிகம் துவண்டவளாய் , உரிமேறியிருக்கும் அவன் நெஞ்சத்தில் தலை சாய்த்துக்  கதறவே தவியாய் தவித்துக் கொண்டிருப்பதில் இருந்து வெளி வர முடியவில்லை ..

மகிழ்ச்சியை கொட்டிக் கொடுத்த அந்நாளிலேயே மீண்டும் நரகத்தின் வலியையும் காட்டிவிட்டான் . எவிரிடமும் பகிர்ந்துக் கொள்ளவும் முடியவில்லை .  'நான் தவறு செய்துவிட்டேனோ..' என்று கோடி முறை நினைத்து நினைத்து மறுகியாகிவிட்டது . ஆனால் , பலன் பற்றி மட்டும் ஒரு தெளிவிற்கு வர முடியவில்லை ‌ .

வா.. வா... என் அன்பே...حيث تعيش القصص. اكتشف الآن