வா.. வா.. என் அன்பே - 104

1.9K 46 13
                                    

ஹாய் நட்புகளே ,

எல்லோரும் எப்படி இருக்கீங்க.. மூன்று எபிக்களையும் இணைத்து.. ஒரே யூடியாக போட்டு இருக்கிறேன் . லாங் யூடி.. ஸோ , லேட் பண்ணீட்டேன்னு எப்பவும் போல என்னை புகழ்ந்துட்டே இல்லாம.. மறக்காம கமென்ட் பாக்ஸை ஃபுல் பண்ணுங்கப்பா.. 🤣🤣🤣🤣🤣

இப்படிக்கு

கனி தேவ் 💕💕💕

❇️❇️❇️❇️❇️❇️

பகுதி - 104

ஓய்வு எடுத்த வரை போதும் என்று எண்ணிய அக்னி பறவை.. இருட்டை விழுங்கி தன் பசியை ஆற்றிக் கொண்டு.. புவியவளுக்கு வெளிச்சம் கொடுத்து உதவி இருக்க.. கீழ் வானம் அழகாய் வெளுத்து பூமிக்கு விடியலை பறைச்சாற்றியது .

வெண்புகை சூழ , அழகு மலர்களின் படுக்கையில் படுத்து இருந்தவளை தீண்டிய , சுகமான காற்று.. அதில் நிரம்பி இருந்த நறுமணம் . அதனை ஆழ்ந்து அவள் நாசியால் உள்ளிழுக்க.. உடல் முழுவதும் பரவிய சுகத்தால்‌.. ஆராவின் அதரங்கள் அழகாய் விரிந்து மீண்டும் மலர் படுக்கையில் முகத்தை புதைத்து இருக்க..

" ஆரா..", என்று ஆண்மை நிறைந்த குரல் மென்மையாக , அவள் காதிற்குள் அழைக்கவும்.. விழிகளை திறவாமலேயே..

" கொஞ்ச நேரம்.. ", என்று அவள் சிணுங்க..

" ஆரா.. என்னை பாரு..", என்று ஆறடி ஆண் மகன் முகத்துடன் முகம் உரசியவனாய் , கிசுகிசுக்க.. முதல்முறையாக , உடலில் செல்களின் சிலிர்ப்பு ஏற்படவே , மெல்ல விழிகளை மலர்ந்தாள்.. வெண்புகையை தவிர வேறு ஒருவரும் தென்படவில்லை ‌.

" யாரு.. யாரு என்னை அழைச்சது..", என்று தன்னைத் தானே சுற்றியவள்.. நாலா திசையிலும் பார்வையை சுழற்ற ஒருவரும் இல்லை.. இப்பொழுது அவளது கால்களோ , மலர்வனத்தில் நின்று இருந்தது.. ஆனாலும் , வசீகரனை காணும் ஆவல் பெறுக ,  மலர்களின் கூட்டத்திற்குள் ஓடினாள்..

" இங்க ஆரா..", என்று மீண்டும் மாயவனின் குரல் விண்ணில் வரை எதிரொளிக்க.. அவன் எங்கு இருக்கிறான் என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now