அன்பே - 9

1.4K 35 2
                                    

பகுதி - 9

இதுவரை உணராத தன் எண்ண சுழற்சியை பற்றி , இப்பொழுது பலமாக யோசிக்க தொடங்கியிருந்தான்..  வியாபாரத்தின் சிகரமாக விளங்கும்  தொழில் வட்டாரங்களில் செல்லமாக அழைக்கப்படும் RPS ( R.P.Saran mithran ) என்னும் சரண்மித்ரன் .

கையில் ஏந்திய திரவத்தை சிறிது சிறிதாக , தன் வாய் வழியாக வயிற்றில் அனுப்பிக் கொண்டிருந்தவன் , சரியான விதத்தில் யோசிக்கத் தொடங்கியிருந்தான் . தன் சஞ்சலத்திற்கோ.. கோபத்திற்கோ காரணமானவள்.. வெறும் பணத்திற்காக உடலை விற்க வந்த பெண்ணின் மீதென்று . அவளுக்கு தான் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க தேவையா..? என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டவனுக்கு..  தேவையே இல்லை.. அவசியமற்றுது.. என்று ஆர்.பீ.எஸ்யின் மூளை கட்டளையிட.. அதை அப்படியே ஏற்றுக் கொண்டான் . கடந்த ஐந்து வருடங்களாக , ஒளிந்து கொண்டிருந்த சரண்.. இன்று அவளால் எழுப்பப்பட்டிருந்ததாலேயே.. இத்தனை துயரம் .

ஆனால் , ஒரு எல்லையை கடக்கும் தருவாயில் விழித்து விட்டான்.. அவனுள் புதிதாய் பிறந்து வேரூன்றி வளர்ந்திருக்கும் ஆர்.பி.எஸ் . அவனுடைய அந்த பிம்பம் , மனதில் இருந்து வெளி வந்த பிறகு , பழைய சரணிற்கு வேலையிருக்குமா என்ன ? ' அவ ஒரு ப்ராஸ்டியூட்.. டோன்ட் வேஸ்ட் யுவர் டைம்.. ஃபார் தட் சில்லி கேர்ள் ' என்று கடுமையாக சாடிய பின்.. தாமரையின் நினைவுகள்.. அப்படியே மூளைக்குள் இருக்கும் ஒரு மூலையில் ஒளிந்துக் கொள்ள..

இதுவரை இருந்த குழப்பும்.. கோபமும் மறைந்து முன்பை விட.. தன் மனதை இறுக்கமாக கடிவாளமிட்டு.. இரும்பு கவத்தை அணிந்து கொண்டவனாக இருந்ததில்.. சரண் முழுதாய் RPS ஆக  மாறியிருந்தான் என்றால்  பொருத்தமாக இருக்கும் .

தன் தொழில் சம்பந்தமாக பாரீஸில் இருந்து மொனாக்கோ வந்தவன்.. அதில் முழுதாய் மூழ்கியே போனான் . தன் உதவியாளி ஸோயி ( Zoe ) உடன் இருக்கவே.. நிறைவாக தன் வியாபாரத்தை வெற்றிகரமாக முடித்தில்.. தாமரையை முழுவதுமாய் மறந்தே போனான் .

மாதங்கள் இரண்டு கடந்திருக்க , வெற்றிகரமாக தன் ஹோட்டலை மொனாக்கோவில் திறக்கப்பட்டதில்.. மேலும் அவன் வளர்ச்சி அனைவராலும் பாராட்டப்பட்டது . 'இளம் வயதிலேயே , ப்ரான்ஸ் நாட்டில்..  தொழிலில் சிங்கமாய் வளர்ந்திருக்கும் ஒரு இந்திய தொழிலில் அதிபன் ' , என்று அந்த அரசால் கௌரவிக்கப்பட.. அத்தோடு நில்லாமல் அனைத்து பிஸ்னஸ் மேக்சினிலும் இன்டியன் லயன் என்று  புகழாரம் சூட்டப்பட.. பிபிசியிலும் அவனை பேட்டி எடுத்திருக்கவே , மகனின் வானுயர வளர்ச்சியில் பெருமையாகவே இருந்தார்கள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now