வா.. வா.. என் அன்பே - 115

1K 46 10
                                    

பகுதி - 115

ரிச்சர்ட் தாமரையை அவர்கள் இல்லத்திற்கு அழைத்துச் செல்வதை சரண் தடுத்து நிறுத்துவான் என்று அனைவரும் எதிர்ப்பார்க்க . ஆனால் , நம் தலைவரோ , அதனை பொய்யாக்கி இருந்தார் ‌ .

அவள் கால் அடியில் மண்டியிட்டு கதறியவனின் செயலாலேயே , ரிச்சர்ட் அவனுக்கு பரிந்து அவள் இடமே சண்டை போட்டு இருந்தான் . ஆனால் , எப்பொழுது மயூரியின் கோபத்திற்காக தங்கையை நினைக்காமல் மருத்துவமனை விட்டு வெளியேற நகர்ந்து இருந்தானோ , தடுத்து நிறுத்தி இருந்தாலும் , அச்செய்கை ரிச்சர்ட்டின் சினத்திற்கு தூண்டுகோலாக இருந்தது என்றால் , அவளை அவர்கள் வீட்டிற்கு அனுப்பவில்லை என்று கூறியதற்கும் மறுப்பு தெரிவிக்காததும்.. மருத்துவமனையில் இருந்து அவளுடன் அவர்கள் வீட்டிற்கு உடன் அழைத்தற்கும் வர மறுத்தவனாய் , வேலை விஷயமாக வெளியூர் சென்ற செயலையும் , ஏனோ ரிச்சர்டின் மனம் முழுமையாக ஏற்க மறுத்து , இயல்பாக இருக்கவிடாமல் செய்து இருந்தது .

இரு தினங்கள் ,  அவனிடம் இருந்து ஒரு அழைப்பும் அவளுக்கு வந்து இருக்கவில்லை . தாமரையின் நலனில் அக்கறை அற்றவனாக நடந்துக் கொண்டது வேறு மேலும் அவன் சினத்தை விசிறிவிடுவதாக இருக்க.. கொந்தளித்துக் கொண்டு இருந்தவனை ,

" ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு நீ ரொம்பவே டென்ஷன் ஆகுற ரிச்சா.. சரண் அவளை விட மாட்டேன்னு சொன்னா .. இது அவ அம்மா வீடுன்னு குதிக்கிற . சரின்னு அலோவ் பண்ணினா.. அவனுக்கு அவ மேல அக்கறையே இல்லேன்னு சண்டைக்கு வர .‌ உனக்கு என்ன தான்டா வேணும் . ", என்று தாரா ஒரு கட்டத்திற்கு மேல் அவனுடைய கத்தல் தாளாமல் பொங்கிய பிறகே , சற்று தணிந்து நிதானத்தை கடைப் பிடிக்க முயன்றான் . ஆனாலும் , அதற்கும் சரண் முழுமையாக வழிவிடவில்லை .

மூன்றாம் நாள் அதிகாலை நான்கு மணி அளவில் வாயில் மணியை அழுத்தி காத்து இருந்தவனின் கண்களோ கொவ்வைப் பழமாக சிவந்து இருக்க.. " சரண்.. நீங்க இங்க .‌. இந்த நேரத்தில..", என்று வார்த்தைகளில் ஏற்பட்ட தடுமாற்றத்துடன் கேட்டவனிடம் ,

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now