வா.. வா.. என் அன்பே - 103

1.2K 45 10
                                    

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

பச்சரிசி மாக்கோலம் , மாவிலை தோரணம்.. சூரியபகவானின் ஆசீர்வாதத்துடன் விறகு அடுப்பில் சக்கரை பொங்கல்.. மூக்கரும்பின் பந்தல்.. புத்தாடைன்னு கோலாகலமா எங்கள் வீட்டில் கொண்டாடியாச்சு..

இதேபோல் , நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை குடும்பத்துடன் கொண்டாடி இருப்பீர்கள் என்று நம்புகிறேன் .

பொங்கும் பொங்கல் போல் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சிகள் பெருக இறைவனிடம் வேண்டுவோம்‌..

எப்பவும் போல் தாமதமான பதிவிறக்கு மன்னிப்பு வேண்டுகிறேன் . கடந்த பத்து நாட்களாக , அலைபேசியை கையில் எடுக்கவே முடியாத அளவிற்கு வீட்டு வேலைகள் நெட்டி தள்ளிவிட்டது.. கூடவே , வாண்டுகளின் பள்ளி விடுமுறை .. சொல்லவே வேண்டாம்..ஸாரி.. ஸாரி..😔😔🤪🤪

ப்ராப்பரா எடிட் பண்ணல.. ஸோ , மிஸ்டேக்ஸ் இருந்தாலும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கங்க.. 🤪🤪

இப்படிக்கு ,

கனிதேவ் 💞💞💞

❇️❇️❇️❇️❇️

பகுதி - 103

சரண் , வேண்டாம் என்றதுடன் ப்ளீஸ் என்று கண்களில் உயிர் வலியை தேக்கியவனாய் ஆறுதல் தேடவும்.. மொத்தமாக துடித்த தாமரையின் கண்களில் திரண்ட கண்ணீர்த் துளிகள் கடைவிழி ஓரம் வழிந்து ஓடினாலும் , தன்னவனை ஆறுதல் செய்வதே முதன்மையாக தோன்றியதில் , அவளது விரல்கள் மிகவும் மென்மையாக தலையை கோத.. அது தந்த இதத்திலும் ஆறுதலிலும் தன்னை நிதானித்தவனாக.. சிறிதளவு தெளிந்தவன்.. அவளில் இருந்து கீழே சரிந்து , தாமரையை தன் மேல் போட்டுக் கொண்டு இறுக்கமாக அணைந்துக் கொள்ள.. நெகிழ்ந்து இருக்கும் மனமோ , அழகான புன்னகை பூக்கச் செய்ய.. காதலின் சோர்வு முழுவதும் பரவி இருந்த போதிலும்.. பனியில் நனைந்த மலராக இருப்பவளை , மேலும் ஆரத் தழுவியவன்..

" பாப்பா.. நாளைக்கு நான் ஜம்மு போறேன்.. ஏர்லியரா கிளம்பனும்.. ம்.. வர பத்து நாள் ஆகும் .. சான்ஸ்கர்ல மொமைல் எடுக்காது.. ஸோ , அங்க இருக்குற வரைக்கும் பேச முடியாது.. ( இல்லேனா மட்டும் அவளோட நீ குழவீட்டா டா இருக்க.. ) என்று மனசாட்சி கடிப்பதையும் கண்டுக் கொள்ளாதவனாக.. மென்மையாக , அவள் கூந்தல் சுருள் முடிகளை காதுமடலுக்குள் நகர்த்தியவனாக , மெதுவாக கூறியவனின் குரலில் வழிந்த ஏக்கம்.. தாமரையை கட்டிப் போட்டு இருந்ததாய் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now