வா.. வா.. என் அன்பே - 37

1.4K 43 20
                                    

பகுதி - 37

தாமரை சரணோடு வீடு திரும்பி ஒரு வாரத்திற்கு மேல் கடந்துவிட்டது.. மொத்தக் குடும்பமும் அவளை தாங்க.. தாங்க வேண்டியவனுக்கோ.. அவளின் நினைப்பும் இருப்பது போல் குடும்பத்தில் இருப்போருக்கு தெரியவில்லை .

ராம் அவருடைய அறையில் , தீவிர யோசனையில் இருந்தவராய்..

" ராம்.. ஏன் இங்க உட்கார்ந்து இருக்கீங்க..", என்று அவரின் அருகே அமர்ந்தார் மயூரி..

" சும்மா.. ",

" என்ன யோசனை ராம்.. நம்ம சரணா..", என்றவரிடம்..

" ம்.. மான்சியோட நடிச்சிட்டு இருக்கான்..", என்றார்..

இது தெரிந்தது தானே.. பத்து வாரங்களுக்கு மேலாக சூட்டிங்.. நடந்துக் கொண்டிருக்கிறது. வேண்டாம் என்று கூறியதையும் காதில் வாங்காமல்.. அவன் நினைத்ததையே நடத்திக் கொண்டிருக்கிறான்.

" நமக்கு ஏற்கனவே தெரிஞ்சது தானே ராம்.. புதுசா கவலைப்பட என்ன இருக்கு.. ", என்று கேள்வி எழுப்பினாலும்.. அவருக்கும் அச்செயலால்.. அவன் மீது வருத்தமே ,

" தாமரை.. அந்த பொண்ணு வாழ்க்கையை நாமும் சேர்ந்து அழிச்சிட்டமோன்னு தோணுது மயூ.. சின்னப் பொண்ணு.. ஆறுதலா இருக்க வேண்டியவன்.. இப்படி பண்றான்.. நம்ம சுயநலத்துக்காக நாமும் அவளுக்கு நியாயம் செய்யலையோன்னு இருக்கு.. மயூ..", என்று கவலையாக கூறியவர்..

" எல்லாத்துக்கும் நம்ம முன்னாடி வந்த பையன்.. நம்மல விட்டு ரொம்ப தூரம் போயிட்டானோன்னு தோணுது.. ராமோட பையன் சரண்மித்ரன்னு சொன்னது மாறி.. இவரு தான் சரண் ஸாரோட , அப்பான்னு சொல்லறதை கேட்கும் போது அவ்வளவு பெருமையா இருக்கு.. ஆனா , வீட்டுக்குள்ள..", என்று முடிப்பதற்குள் தொண்டை கரகரக்க..

" என்ன ராம் நீங்க.. அவன் எந்த காரணத்துக்காக தாமரைய இங்க கூட்டீட்டு வந்திருக்கான்னு நமக்கு தெரிஞ்சது தானே.. அவ மருமகளா இல்லேனா மகளா இருப்பான்னு முடிவெடுத்து தான.. அவன் போக்குக்கே விட்டு இருக்கோம்.. அப்புறம் ஏன் ராம்.. இவ்வளவு கவலைப்படுறீங்க.. மறுபடியும் மான்சி நம்ம வீட்டுக்கு வந்திடுவாளோன்னு பயப்படுறீங்களா..", என்று.. அவருடைய அச்சத்தை.. கணவனுடையதாக மாற்றி கேள்வி எழுப்பியவரை.. மெதுவாக , தோளோடு அணைத்துக் கொண்டு.. அமைதியாக இருந்தார் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now