வா.. வா என் அன்பே - 107

1.4K 51 13
                                    

பகுதி - 107

தாமரை சரணின் வீட்டை விட்டே வெளியேறிவிட்டாள் என்று தெரிந்த மறு நொடியே , மதுரையில் இருந்து புறப்பட்டு இருந்த விக்கி.. நண்பனின் இல்லத்திற்கு நள்ளிரவு என்றும் பாராமல் வந்ததும் இல்லாமல்.. எதிர்ப்பட்டவனை ஓங்கி அறைந்து இருந்தான் .

இத்தகைய செயலை அங்கு இருந்த யாரும் எதிர்பார்க்கவே இல்லை . ஆனாலும் , அமைதி காத்தவர்களாக பார்வையாளர்களாய் மாறி இருக்க.. கொத்தாக அவன் கழுத்துச் சட்டையை பற்றிய விக்கியோ,

" மனுஷனா டா நீ.. மனுஷனா நீ.‌. இன்னும் இன்னும் என்னென்ன டா.. அந்த புள்ளைக்கு பண்ணலாம்னு காத்து இருக்க.. எனக்கே , அந்த புள்ளைய பாரீஸில முதன்முதலா பார்த்து கண்ணுக்கு உள்ளேயே இருக்கே டா.. உனக்கு இல்லை.. இப்படி மொத்தமா..", என்று ஆத்திரம் அதிகரித்தவனாய் கண்கள் சிவக்க கத்திக் கொண்டே சென்றவனை சரணின் ஒற்றை பார்வை தேக்கி இருந்தது .

அவன் கண்களில் விரவி இருந்த வலி , தவிப்பு , வேதனை என்று அனைத்து உணர்வுகளையும்  சுமந்து இருந்த போதிலும் , அவன் கருவிழிகளில் மின்னல் என மின்னி மறைந்து இருந்த பளபளப்பு.. சரணின் வலியையும் கடந்த கோபத்தை காண்பித்து இருந்ததில் , இரண்டடி பின்னே நகர்ந்தவனாய் அதிர்ச்சியில் உறைந்தவனாய் , தள்ளி  இருந்தான் ‌விக்கி .

" இந்த பார்வைக்கு என்ன டா அர்த்தம்..", என்று சீற்றமாக கேட்ட விக்கிக்கு பதில் சொல்லாதவனாய் சரண் நின்றிருந்த போதும் , தனக்குள் ஆத்திரத்தை புதைத்தவனாக எதிரே நின்று இருந்த நண்பனை ஆழமாக ஏறிட்டதுடன் , அவன் அறைக்கே மீண்டும் சென்று மறைந்துக்  கொள்ள.. இவ்வாறுண இருப்பவனை எப்படி  கையாள்வது என்றே புரியாது , சரண் மித்ரனின்  பிடிவாத்தையும் தகர்த்து வழி தெரியாமல் திகைத்துவிட்டார்கள் ‌.

அவன் பிடிவாதத்தை நன்கு அவள் தெரிந்து வைத்து இருந்ததால் தான் அவ்வளவு பிடிவாதமாக அவனை  மணக்க வேண்டாம் என்று அவ்வளவு பிடிவாதமாக மறுத்தால் போலும் என்றே அங்கு இருந்த அனைவரையும் சரணின் நடத்தை சிந்திக்க செய்து இருந்தது . 

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now