பகுதி - 59
முகம் கசங்க கூறிய சரணின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளை தாக்கியதில்.. விழிகளில் வலியையும் தடுமாற்றத்தையும் படரவிட்டவளாய்.. லேசாக , அவன் மீது தலை சாய்க்க.. அச்சிறு நெருக்கம் , அந்த ஆண்மகனை பெரிதும் சந்தோஷத்திற்கு உள்ளாக்க.. வளைத்திருந்த கரத்தால்.. இறுக்கிக் கொண்டான். தாமரையின் முகம் இப்பொழுது அழுத்தமாகவே அவனுடைய நெஞ்சில் புதைந்திருந்தது .
ஏனோ , அவனிற்குமே இந்த ஏகாந்தத்தை இழக்க மனமில்லாதவனாய்.. அமைதியில் கழித்திருந்தான் . எவ்வளவு நேரமாக இருவரும் , அதேநிலையில் இருந்தார்களோ.. அந்த அறையின் தொலைபேசி அழைப்பு சரணை நடப்பிற்கு இழுத்துவிட்டிருக்க.. அதிலும் , கலையாதவளாய்.. கண்மூடிக் இருந்தாள் தாமரை..
" ஓய்.. போன் அடிக்குது பாரு..", என்று மென்குரலில் காதருகே குனிந்து கூறியதும்..
" ம்..", என்று கார்ட்லெஸ்ஸை எடுத்து அவனிடத்தில் கொடுத்து நகர முற்பட்டவளை கரம் பிடித்து இழுத்து , மீண்டும் தன் அருகே இருத்திக் கொண்டவனிடம்.. முறுக்கிக் கொள்ளாதவளாய் , மீண்டும், அதேபோல் அமர்ந்துக் கொண்டாள்.. புன்முறுவல் பூத்தவன்.. அந்த அழைப்பை முடித்த பின்.. மனைவியின் முகம் காண.. அவளோ , அவன் மார்பின் மீது விழிகளை மூடியவளாய் இருந்தாள் .
" ஓய்.. என்ன தூங்கணுமா..", என்று காதினில் ரகசியம் பேச..
" ம்.. ", என்றதில்.. தன் பற்கள் அனைத்தும் தெரிய சிரித்தவனுக்கும் நன்கு தெரியுமே.. அவள் இவ்வாறே பதில் கூறுவாள் என்று.. தாமரையை அவன் சந்தித்த நாளில் இருந்தே.. அவன் காண்பது.. அவள் ஆழ்ந்த உறக்கத்தை.. யாரென்று அறியாத பொழுதே.. அவளது தூக்கத்தை கலைக்காமல் காவல் காத்தவன்.. இப்பொழுது , தன்னவளாகிய பின்பு.. அவளது ஆழ்ந்த உறக்கமும்.. அவன் கை வளைவில் மட்டுமே என்று தெரிந்த பிறகா தடை விதிப்பான் ..
" அப்போ , நான் தூங்க வைக்கணுமா.. ", என்று குறும்பு குரலில் வினவ.. அவள் இருக்கும் குழப்பத்தில் , முதலில் புரியாமல் அமைதியாக ஒடுங்கியவளுக்கு.. அதன் அர்த்தம் மூளையை தாக்கிய நொடி.. பட்டென்று , தன் பெரிய கருவிழியை விரித்து.. முகம் காண.. அவன் கபடமற்ற சிரிப்பொலி , இசைந்துக் கொண்டிருந்த அவள் குரலுடன் இணைந்ததாய்..
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...