ஹாய் நட்புகளே ,
எடிட் பண்ணவும் நேரம் இல்லை.. அப்டேட் பண்ணி நாள் ஆச்சா.. அதனால் வித் ஆவுட் எடிட்டிங் போஸ்ட் பண்ணீட்டேன் . நிறைய மிஸ்டேக்ஸ் இருக்கும்.. ஸோ , கண்டுக்காதீங்க..
❤️ பகுதி - 147 ❤️
சரண் ' கேட்டேன்...', என்ற ஒற்றைச் சொல்லில் வெளிப்படுத்திய சீற்றத்தில் அவ்விடமே கிடுகிடுத்தது என்றால்.. ஆண் மகனின் நிலையோ , பூகம்பத்தை தனக்குள் பொதித்ததாய் .
தாமரை அவனிடம் காண்பிக்கும் விலகலை ஏற்க முடியாதவனாய் . அவனின் கட்டளைக்கு தாமரையின் மறுப்பு சிறிதளவும் சரணுக்கு ஆத்திரத்தை உண்டாக்கவில்லை . ஆனால் , அவள் மறுத்து கூறிய வார்த்தைகள் கொந்தளிக்கச் செய்து இருந்ததாய் .
" வேண்டாம் மாமா...", என்று ராமிடம் காண்பிக்கும் உறவின் நெருக்கத்தை இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவனிடம் அவள் காண்பிக்க மறுத்து வருவதில் ஏனோ தோற்று போகும் உணர்வை நொடிக்குள் மலை அளவிற்கு உயர்ந்து எழுந்து ஆட்டுவித்து.. மண்டை ஓட்டிற்குள் சுர்ரென்று ஓடிய அதிர்வலைகள்.. ஒட்டு மொத்த நரம்புகளையும் புடைக்கச் செய்து இருக்கவே ,
தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்தவனாய் இறுகிய தாடையுடன் உணர்வற்ற முகத்தை காண்பித்தவனாக அழுத்தமான காலடிகளை எடுத்து வைத்தவாறு தாமரையின் முன் நின்றவனின் தோரணை.. அவனை ஈன்றெடுத்த பெற்றவர்களுக்கே , மனதிற்குள் உதறல்களை மிதமிஞ்சி கொடுத்து இருந்தது என்றால் , மெல்லியாளின் நிலையை வரையறுக்கதான் இயலுமோ..!
அதீத உரிமையுடன் அனைவரிடமும் பழகுபவள்.. அவனை நிராகரிப்பதை ஏற்க முடியாது போவதில் உண்டாகும் பெருங்கோபத்தையும் கட்டுப்படுத்தியவனாக ,
" பாப்பா..', என்று கடிந்த பற்களுக்கு இடையே அடக்கப்பட்ட சீற்றத்துடன் அழைத்தவனின் இரு கரங்களோ.. கால் சட்டையின் பைக்குள் திணித்தவனாக , பூமிக்குள் தலையை புதைப்பது போல் குனிந்து இருந்தவளின் , உச்சந்தலையில் பட்டுத் தெறித்த அவனது உஷ்ண மூச்சுக்காற்றில் , ஆத்திரத்தின் அளவுகோலை எடுத்துக்காட்டிட .. அதிகமாக , தலையை தரைக்குள் புதைத்தவளாக குனிந்தவளின் இதழ்களோ வெகுவாக நடுக்கத்தில் துடிக்க.. தன் கீழ் பற்களால் கடித்து நிலைப்படுத்த முயன்றவளாய் .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...