பகுதி - 12
மான்சியின் கூற்றை மெயென்று ஏற்றுக் கொள்ள முடியாமல் ,
படுக்கையில் மாற்றம் இல்லாதவனாக.. அவள் வீடு , தேடி சென்ற நாளை நினைக்க ஆரம்பித்து விட்டான்..இருவருக்குமான படப்பதிவு முடிந்தாகிய நிலை.. இனி , அவர்களின் படம் வெளியாகும் வரை சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் என்பது மிகவும் அரிதே.. ஆனால் அவனுக்கோ, மான்சியை காண வேண்டும் என்ற ஆவல்.. தன்னை விட்டு நீங்காமல் இருக்கவே , அவள் வீடு தேடி சென்றுவிட்டான் .
மான்சியின் உதவியாளி.. அவனை அங்கே.. எதிர்பார்க்கவில்லை போலும் , வெளிப்படையாகவே அதிர்ந்து.. மெல்லிய படபடப்போடு , அவனை அமர வைத்தவள்.. மான்சியை அழைக்க மாடிக்கு விரைந்தாள் . சிறிது நேரத்திலேயே , அவனிடம் வந்து.. பழச்சாறை கொடுத்து உபசரித்து.. அவள் சிறிது நேரத்தில் வந்திடுவதாக கூறவே.. விழிகளை சுழற்றியபடியே அமர்ந்திருந்தான் .
மிக நேர்த்தியாக இருந்த வரவேற்பறை , சுற்றிலும் அவளுடைய புகைப்படங்களே.. சிறுவயது முதல் தற்போது வரை இருக்கும் அவளுடைய படங்களாக இருந்தது . புதிதாய் மொட்டு மலர்ந்திருக்கும் காதலால்.. காதலியின் அழகு , குறும்பு , வெற்றி அனைத்தும் பன்மடங்காக தெரிய.. மிகுந்த இரசனையோடு வருடியது , அவன் காந்த விழிகள் . அதேநேரம்.. காற்றோடு கலந்து வந்த குரல்.. இனிமையாக செவிகளுக்கு விருந்தாக , அந்த குரலின் பாடல் ஓயும் வரை , மெய் மறந்திருந்தான் .
தன் கால்களோ.. அந்த மெல்லிய குரல் வந்த திசையை நோக்கி பயணிக்க.. மாடியில் இருக்கும் ஒரு அறையின் வாசலில் கொண்டு வந்து விட்டது . அப்படியொரு இனிமையான குரலில் பாட்டு சத்தம் கேட்க.. முதலில் மான்சி என்றெல்லாம் நினைக்கவில்லை .
அவன் அறியாத பாடகர்கள் அல்ல.. ஆனாலும் அந்த குரல் அவனை பெரிதும் காந்தமாய் கவர்ந்திழுத்திருந்தது . சிந்தும் வரிகளில் அவ்வளவு குழைவு.. காதல்.. சரணை ஒவ்வொரு நொடியும் சிலிர்க்கச் செய்தது .
ஆனால் , அந்த அறைக்கு அவன் வந்தவுடன் பாட்டுச் சத்தமும்.. நின்றுவிட.. மெதுவாக தட்டினான்.. மான்சியின் அறையாக இருக்கவே.. இரட்டிப்பு மகிழ்ச்சி..
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...