அன்பே - 15

1.2K 29 15
                                    

பகுதி - 15

ரிச்சர்ட், இரவு பன்னிரண்டு மணிக்கு ,தன் அப்பார்ட்மெண்டிற்குள் நுழைந்தவன். அப்படியே படுக்கையில் விழுந்திருந்தான். உதயதாரா.. என்று உதடுகள் அசைவில்லாத முணுமுணுப்பு.. யாருக்கு பயந்து ஓடி ஒளிந்தானோ.. அவளே இன்று அவன் இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்து வந்துவிட்டாள் . இனிமேல் எங்கும் ஓட முடியாது.. அதற்கு விருப்பமும் இல்லை.

அவளை பார்க்கும் வரை எவ்வித பாதிப்பும் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக இருந்தவனால்.. இன்று அப்படி இருக்க முடியவில்லை . அவள் தன்னை அடையாளம் கண்டு கொண்டு.. கண்களில் பொங்கி வழிந்த காதலோடு நெருங்குகையில்.. திகைத்து.. அதிர்ந்துவிட்டான் . அவன் மறந்து ஒதிக்கிய விஷயம்.. பல மடங்காக அவள் கண்களில் படர்த்திருந்ததை கண்டு , சந்தோஷிக்க முடியவில்லை.

இப்படியே விட்டத்தை வெறித்தவனாக.. கிடந்தவனின் கண்கள் எப்பொழுது சொருகியதோ ?, கும்மிருட்டில் அடைப்பட்டுக் கிடந்த மூன்று வயது குழந்தை.. கண் விழித்ததும்.. அந்த கோர இருட்டிற்கு அஞ்சியவனாக.. "அம்மா.. அம்மா.. பயமா இருக்குமா.. ஒரே இருட்டா இருக்கா..ம்மா‌‌.." என்ற அலறல் சத்தத்தில்.. முழிப்பு வர.. தொப்பலாக நனைந்திருந்தான் ரிச்சர்ட் . இது ஒன்றும் அவனுக்குப் புதிதல்லா.. ஆனால் ஒவ்வொரு முறையும் அதே நடுக்கம் அவனை இன்று வரை அவனை ஆட்டிப்படைக்கிறது.. அதையே நினைத்தவனாக.. என்ன? சிறிது காலமாக மறைந்திருந்த நினைவுகள், மறுபடியும் அலைக்கழிக்கவை தடுமாறி போனான் .

படுக்கையில் இருந்து உடை மாற்ற நினைத்து எழுந்தவனை.. அவன் அலைபேசி அழைத்து, அருகில் கூப்பிட.. யாரு இந்த நேரத்தில்,என்ற யோசனையோடு எடுக்கவே, விக்கியாக இருந்தான் . இவன் எதுக்காக என்று தன் விரல்களால் நெற்றியை தடவியவனாக.. அழைப்பை ஏற்காகமல் விட்டு விட.. விடாக்கண்டன் தொடர்ந்தவனாய் , எடுத்து பார்த்தவனின் இரத்த  அழுத்தம் ஏகத்திற்கு எகுறியது.

'எல்லாம் இவனால்..' என்று அர்ச்சித்தவாறே," ஹா..லோ.." என்ற அழைப்பிலேயே அனல் தெறிக்க..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now