வா.. வா என் அன்பே - 109

1.2K 54 13
                                    

பகுதி - 109

தாமரை அவ்வாறு பேசும் பொழுதே , சாவித்திரியின் கரம் இடி என இறங்கி இருந்தது .

" நீ இப்படி நினைக்கிறதுக்காக தான , நாங்க எல்லோரும் உன் மேல உயிரையே வச்சு இருக்கோம்.. என் அண்ணனும் அண்ணியும் உனக்காக பார்த்து பார்த்து செய்தாங்க.. எங்களை விடு.. உன் தம்பிய நினைச்சு பார்த்தியா.. என்ன பேச்சு பேசீட்டு இருக்க..", என்று குமுறியவரின் முகத்தையும் பாராமல் தாமரையின் விழிகள் அவரையும் கடந்து வாயில் நிலைப்படியில் தன் கரங்களை கட்டிக் கொண்டு சாய்ந்தவாறு நின்று இருந்த சரணின் மீது நிலைத்து இருந்தது .

" அம்மா அவ எதோ கோபத்தில பேசுறா.. நீங்க ஏன்..", என்று தடுத்த தாராவிடம்.. மீண்டுமாக , " வாயும் வயிறுமா இருக்கும் போது.. என்ன பேச்சு பேசுறா.. பாரு..", என்று வெடித்தவரை அணைத்து கொண்டாள் .

அவரின் அறையோ , ஆதங்கமோ.. தாமரையை தீண்டயதாகவே தெரியவில்லை . அவள் பார்வை சென்ற திசையை வைத்தே மான்சியும் கவனிக்க , அவள் அறியாமலேயே , " ஷா..ன்..", என்று முழு அதிர்வையும் வெளியிட்டவளாக முனங்கியதில் , மற்றவர்களும் திரும்பி பார்த்து சரணின் வருகையை வியப்புடன் உள்வாங்கயவர்களாகவே நின்றுவிட.. அவசரமாக இருக்கையில் இருந்து எழுந்த ஆரவ் ,

" வா.. சரண்.. ஏன் அங்கே நின்னுட்ட.. ", என்று உள்ளே அவனை அழைத்து வந்தவன் முதல் வேலையாக கதவை அடைக்கவும்.. நீண்ட மௌனமே ஆட்சி புரிந்ததாய் .

மான்சியோ , சரணின் தோற்றம் கண்டு அதிர்ச்சியில் இருந்து வெளி வராதவளாய்.. அவனது கண்களை சுற்றி கருமை பூசி இருக்க.. சில வருடங்களாகவே, என்றுமே அவனது கன்னங்களில் ரோமங்கள் வளர்ந்து இருக்கிறது தான்.. ஆனால் , அதில் தெரியும் மிடுக்கு.. இன்று மொத்தமாக தொலைந்து போயிருக்க.. அவன் விழி வட்டத்திற்குள் தாமரையை தவிர ஒருவரும் இல்லை என்று தெளிவாய் புரிந்ததில் , மான்சியின் மனம் வேகமாக கடந்த காலத்திற்கு சென்று மீண்டதாய் ..

ஒவ்வொரு முறையும் அவள் கோபம் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டால் , அன்றும் மனைவியை தேடி வராதவன் இல்லை . ஆனால் , அன்றைக்கும் இன்றைக்கும் ஓராயிரம் வேறுபாடுகள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now