வா.. வா.. என் அன்பே - 61

1.3K 51 24
                                    

பகுதி - 61

சரணின் திருமணத்தைப் பற்றி பேசியதுமே , தாமரையை விரும்புவதாகவும்.. அவளை பாரீஸிலேயே மணந்துக் கொண்டதாகவும் தயக்கமே இல்லாமல் பொய் சொல்லிவிட்டான் . ஏன் , அவளை கூறினோம் என்று இந்த நிமிடம் வரை அவனிடத்தில் பதில் இல்லை என்றே கூற வேண்டும் .

ஆனால் , ராம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப் போவதாக கூறியதும்.. அவனால் , ஏற்கவே முடியவில்லை . நடிப்பிற்காக அழைத்து அவளை அனுப்பிவிடும் முடிவில் இருந்தவனுக்கும் தாயகத்தில் நீண்டித்திருப்பதையும் விரும்பியிருக்கவில்லை .

அது அத்தனையையும் ராம் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் என்றே கூற வேண்டும் . மீண்டும் , கல்யாணம் என்ற நிகழ்விற்கு.. "எத்தனை முறை தாலிக் கட்டுவது", என்று கூறி அவன் பிடிவாதமாக மறுத்த பொழுதோ..

" மனைவியின் கழுத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் , கட்டலாம்.. தப்பே இல்லை.. எங்க அப்பாவே மூணாவது முறையாக தாலி கட்டி இருக்கிறார் . அவர் பேரன் நீ.. கூடுதலாகவே கட்டலாம்..", என்று விளையாட்டு பேச்சைப் போல் தட்டிக் கழித்ததோடு அல்லாமல்.. சரணின் விருப்பத்திற்கு எதிராகவே நிகழ்த்தி இருந்தார் .

திருமணத்தன்றும் , அவனால் இயல்பாக தாமரையை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்ததே நிஜம் . ஒவ்வொரு முறையும் அவள் கண்களில் தொக்கி நிற்கும் கேள்வியும்.. வியப்பும்.. ஏனோ , அந்நியப்படுத்துவது போல் இருப்பதை உணர்ந்திருந்ததாலேயே.. அனுமதியை வேண்டி அரைநொடியேனும் , தாலியை ஏந்தி அவள் சம்மதத்திற்காக தாமதித்திருந்தான் .

அவளை கண்ட நாள் முதல் ஏற்பட்ட தடுமாற்றத்திற்கு காரணத்தை அறிய முடியாது போனாலும்.. மனைவி என்று அவ்வளவு எளிதாக ஏற்க முடியாமல் தடுமாறி இருந்தவனுக்கு.. மான்சியுடனான முத்தக்காட்சியிலும் நடிக்க முடியாமல்.. அருவருத்து விலகினானோ.. அந்த நொடி , தாமரை , தன் உள்ளத்தில் வேரூன்றி படர்ந்து .. மலர்ந்து விரிந்திருக்கிறாள்.. என்று புரிந்துக் கொண்டான்.

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now