வா.. வா.. என் அன்பே - 20

1.4K 31 21
                                    

பகுதி - 20

சில கணங்கள், மௌனத்தில் இருந்தவனின் குரல்.. அதைவிட.. வேகமாக அதிகாரமாக ஒலித்தது.."ரெண்டே நிமிஷம்.. எங்க நீ இருந்தாலும்.. உடனே வெளிய போய் இருக்கனும்.. அரைமணி நேரத்தில.. திருவான்மியூர் கெஸ்ட் ஹௌஸ் வந்திருக்கனும்.. புரிஞ்சதா.." என்றான்.

" அரை.. அரை.‌. மணி.. நேரத்திலையா?" என்று விக்கித்து நின்றிருந்தாள்.. அவள் சொன்னதை கேட்பதற்கும்.. அந்த ஆணவக்காரனுக்கு நேரமில்லாமல் போனது.. அழைப்பை எப்பொழுதோ துண்டித்துவிட்டான் .

எப்படி போக முடியும்.. அதுவும் இங்கிருந்து.. போகவில்லை என்றால்.. ஏற்படப் போகும் விபரீதத்தை நினைத்தவளாக.. நடுங்கிக் கொணடிருந்தவள்.." நான் .. போய்ட்டு.. வரேன்.." என்று அதீத பதற்றத்தில் நிலை தடுமாறவும்..

"ஒரு நிமிஷம் நில்லும்மா.." ராம் தடுத்திருந்தார்.

மிரண்டிருந்த விழகளால் ஏறிட,"முதல்ல அவனுக்கு கால் பண்ணி.. லாங் டிஸ்டன்ஸ்ல இருக்கன்னு சொல்லு.." என்றார்.

"எங்க.. இருக்கன்னு கேட்டா.. நா..", என்று மேலும் பதற..

"சோழிங்கநல்லூர்ன்னு சொல்லு.." என்றவர்.. தன் தடயை நீவியவராக.. "எப்ப இந்தியா வந்தான்னு தெரியுமா.. ",என்று அவளிடம் கேட்க..

"தெ.. தெரியாது.. தெரிஞ்சிருந்தா... இங்குன வந்துருக்கவே மாட்டேன்.." என்று கூறியவளின் பயம்.. அவளுள்.. அரித்து எடுப்பதை நன்றாகவே.. அங்கிருந்தவர்களுக்கு புரிய.. பரிதாபமே எழுந்தது.. அதேசமயம் சரணின் மேல் கோபமும் எழுந்தது.


ராம் சொன்னது போல் அவனுக்கு அழைத்து அவள் சொல்லவும்.. தீவிரமான யோசனையில் இருந்திருப்பான் போலும்.. அமைதியாக இருக்கவே.. "எனக்கு அட்ரெஸ் தெரியாது.." என்றாள்..


அதற்கு மட்டும் " நீ இருக்குற ஸ்பாட் சொல்லு.. அரேன்ஞ் பண்றேன்.." என்றான்.. மீண்டும் உள்ளுக்குள் ஐய்யோ.. என்று அலறியவள்.. ராமை பார்க்க.. சரி என்பது போல் தலையசைத்து வைக்கவும்.. அவளும் அவ்வாறே செய்து அழைப்பை துண்டித்து இருந்தாள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now