வா.. வா.. என் அன்பே - 70

1.8K 48 27
                                    

பகுதி - 70

தாமரையின் முத்தத்தில் ஆறடி ஆண் மகன் உருகிக் கொண்டிருந்தாலும் , எதிர்வினை புரியாது.. அவளின் இடையையும் வளைக்காதவனாக நின்றிருக்கவும்.. மெல்ல விலகியவளுக்கோ , தவிப்பு மட்டுமே கூடுதல் சொந்தமாக.. தட தடக்கும் இதயத்தை கட்டுப்படுத்த முடியாமல்.. ஏக்கமாக ஏறிட்டவளாய்.‌.

" இதெல்லாம் எப்ப படம் பிடிச்சீய.. நான்.. முத நாள் உங்களை பார்க்கவே இல்லையே..", என்று வெளி வராத குரலில் கேட்டவளாக..

" இப்போ.. நீ கொடுத்த முத்தமும்.. உன் கேள்விக்கான பதிலுக்காக தான்.. எனக்காக இல்லை..", என்று கூர்ய விழிகளால் துழைத்தவனாய் கேட்டு.. அவளை  திகைக்கச் செய்திருந்தான் .

தாமரையின் அதிர்ந்த முகத்தையும் கண்டுக் கொள்ளாமல்.. அவளை கடந்து அறைக்குள் நுழைந்தவன்.. குளியறைக்குள் புகுந்துக் கொள்ள..  அதுவரை.. அசையாது சிலையாய் நின்றுவிட்டாள்.. அவள் மீதான சினத்தை அறைந்து சாற்றிய கதவில் வெளிப்படுத்தியதில்.. படார் என்ற சத்தத்தால் காது ஜவும் கிழிந்தது  போலாக..

" போச்சு.. போச்சு.. வேதாளம் முருங்கை மரத்தில இருந்து இறங்கியே வரலை போல.. எப்படி இறக்குறதுன்னு தெரியலையே.. ", என்று வாய்விட்டே புலம்பியவளாய்.. கைகளை உதறிக் கொண்டு நின்றிருக்க..

தன் பூந்துவளை எடுப்பதற்காக வெளி வந்தவனின் செவிகளுக்கு அவளது புலம்பல் விருந்தாக.. தன் கரத்தால் மறைத்து சத்தமில்லாமல் குலுங்கியவன்.. ' நான் வேதாளமா டீ உனக்கு.. ',  என்று செல்லமாக கருவியவனாய் .. அவள் கவனத்தை ஈர்க்காதவாறு அகன்றுவிட்டான் .

மீண்டும் வந்து சென்றதை அறியாதவள்.. திரும்பி ஒருமுறை அடைத்திருந்த கதவினை வெறிக்க.. மற்றவைகள் அனைத்தும் பின்னுக்கு சென்றது போல்.. அவனது பயணக் களைப்பை பற்றிய நினைவே முதன்மையானதில் , விரைந்து மற்றொரு குளியலறைக்குள் புகுந்து.. காலைக் கடன்களை முடித்தவள்.. அவனுக்கு முன்பாக வெளி வந்து , சமையலறைக்குள் சென்றாள்..

வேகமாக , அவனுக்கான காபி தயாரிப்பில் ஈடுபட்டாலும் , அங்கு பல வருடங்களாக வேலை பார்க்கும் பெண்மணியான பூமாவிடம் , " பூமா அக்கா.. எல்லோருக்கும் காபி கொடுத்துட்டீயளா.. அம்மா எழுந்துட்டாகளா..", என்று சாவித்திரி அங்கு இல்லாததால் விசாரிக்க‌..

வா.. வா... என் அன்பே...Место, где живут истории. Откройте их для себя