வா.. வா.. என் அன்பே - 101

1.2K 51 20
                                    

பகுதி - 101

நான் தூரம் செல்ல
துடிக்கிறேன்..
உன் நினைவுகள் - என்னை
துறத்துகிறதே..

நான் விலகி இருக்க
முயல்கிறேன்..
உன் நேசம் - என்னை
விட மறுக்கிறதே..

நான் தகிக்கும் தாபத்தை
வெறுக்கிறேன்..
உன்னில் தணிந்தது - என்னை
பற்றியேரிய செய்கிறதே..

என்று தனக்குள்ளாக மறுகியவன்.. உறக்கத்திற்கு போராட.. விழித்திருக்கும் நினைவுகளுக்கோ , அவனிடத்தே கருணை காட்ட மறுத்திருக்க.. .
எப்பொழுது அவனை உறக்கம் தழுவியது என்று அறியாதவனாக , கட்டிலில் கவிழ்ந்து கிடந்தவனை.. கதிரவனின் வருகையை தெரிவித்தவனாக விக்கியே , எழுப்பி இருந்தான் .

சோம்பாலாக , உறக்கம் கலைந்தவனுக்கோ , விடியலின் உற்சாகம் கடுகளவும் இல்லாமல் , ஜடம் போல் அன்றைய நாளை துவங்கினான் .

பல வருடங்களாக , உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்த கங்கு..  இந்த நான்கு மாதங்களாக , எரிமலையின் சீற்றத்தில் வார்ந்தோடியதில் பிடிவாதத்துடனே தாமரையை தவிர்த்து கம்பீரமாகவே வலம் வந்தான்.

ஏனோ , இந்த நான்கு நாட்களாக.. அதுவும் முடியாமல் போக , ஏற்கனவே தாடியுடன் இருப்பவன்.. இப்பொழுது , அதனை சீர் செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் அற்றவனாய் , அலுவலகத்திற்கு புறப்பட.. அதற்கு மேல் விக்கியாலும் அமைதி காக்க முடியாமல் போனது .

" டேய் சரண்.. ஏன் டா இப்படி அலங்கோலமா வந்து நிக்கிற.. என்ன டா டைய் இது..", என்று அதிர்ந்து , அவன் முன் நின்று கத்திய விக்கியின் முக மாறுதலுக்காவே திரும்பியவனாக  கண்ணாடியை ஏறிட , அணியும் பொழுது தெரியாத முரண்பாடு.. பளிச்சென்று புரிந்ததும்.. "ம்ச்சு.." , என்ற சலிப்புடன் , டையை அவிழ்த்து எறிந்தவன் , மீண்டும் படுக்கையில் அமர்ந்தவாறே ,

" எதாவது பார்த்து எடுத்திட்டு வா..",  என்று கூறி சோர்வாய் தென்படவும்.. ‌. விக்கிக்கோ வருத்தம் மிகுந்து இருக்க , " யாரு இவனை இவ்வளவு கஷ்டப்பட சொன்னது..", என்று வாயிற்குள் முணுமுணுத்தவனாக , க்ளோசெட் பகுதிக்குள் நுழைந்து.. டைய் ட்ராயரை திறந்தால் , அவ்வளவு கோலாகலமாக காணப்பட்டது.. குப்பை போல் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கிடக்க..  அரைநொடி , திகைத்து.. பொருத்தமான புள்ளி வைத்த அடர் நீல டைய்யை எடுத்ததோடு.. வெளிர் நீல முழுக்கைச் சட்டையையும் எடுத்தவனாக வந்திருந்தான் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now