வா.. வா.. என் அன்பே - 89

897 36 10
                                    

பகுதி - 89

அழுத்தமான முத்தத்தை நெற்றியில் பதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரிச்சர்ட்டின் மார்பில் தஞ்சம் புகுந்த தாரா நிம்மதியாக விழிமூடிட.. அப்படியே , உறங்கியும் போனாள் .

அரை மணி நேரத்தில் , ரிச்சர்ட் கீழ் இறங்கி வர.. அதற்குள்ளாக ஹோட்டலில் இருந்தும் விருந்தினர்கள் வந்திருந்தார்கள்.. மீண்டும் , கலகலப்பு துவங்கி இருந்தது . தன் சோகங்கள் அனைத்தையும் மாடி அறையிலேயே விட்டு வந்த தாமரையும் , சாந்தியுடன் இணைந்து சமையல் அறையில் இருக்க.. புது மாப்பிள்ளையின் வருகையை கவனித்தவரோ , வேகமாக வெளி வந்தவர்.. அவனை பார்வையால் ஆராய , சிறு வெட்கம் படர்ந்ததில் , அழுத்தமாக தன் தலை கோதியவன்..

" என்ன க்கா புதுசா பார்க்குற மாதிரி பார்க்குறீங்க..", என்று காபியை பெற்றுக் கொள்ளும் சாக்கில் விழிகளை சரித்தவனின் வெட்கம் , அவ்விருவரின் மலர்ச்சியை மறைமுகமாக அவருக்கு தெரிவிக்க..

" ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. உன்னை இப்படி பார்க்க மாட்டேன்னான்னு எவ்வளவு நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா..", என்று நெகிழ்ச்சியாக கூறியவர்..

" தாரா.. எங்க..", என்றார் .

" அவ தூங்குறா.. ", என்பதற்குள் மேலும் தடுமாற.. உள்ளுக்குள் பொங்கும் சிரிப்பை மறைத்தவராக..", சரி சரி.. எழுந்து வரும் போது வரட்டும்.. தொந்தரவு செய்ய வேண்டாம்..", என்று நகர்ந்திருந்தார்.

" தாமரை டீ கூட குடிக்காம என்ன வேலையே பார்த்திட்டு இருக்க.. போ.. போ ஹால்ல உட்கார்ந்து நிதானமா குடிச்சிட்டு வா..", என்று அடிக்காத குறையாக சமையல் அறையில் இருந்து அவளையும் விரட்ட.. சிறு ஒட்ட வைத்த புன்னகையுடன் வெளி வந்தவள் ரிச்சர்ட்டின் அருகே அமர்ந்த நேரம் ,
புயல் வேகத்தில் கீழ் இறங்கிக் கொண்டிருந்தான் சரண் மித்ரன்..

அவன் கோபத்தில் மிரண்டிருந்தவள் , அவன் வருவதை உணர்ந்து எழுந்து நிற்க..  ரிச்சர்ட்டிடமும் நின்று பேசாது , " டைம் ஆச்சு..", என்று பொதுவாக கூறியவனாய் வெளியேற..

வா.. வா... என் அன்பே...On viuen les histories. Descobreix ara