வா.. வா.‌‌. என் அன்பே - 63

1.6K 50 21
                                    

பகுதி - 63

அவர்களது கடை விழாக் கோலம் பூண்டிருந்தது . இது வருடாவருடம் நடக்கும் நிகழ்வு என்றாலும்.. இந்த வருடத்தின் சிறப்பாய் தாமரையும் .. அவளது கை வண்ணமும் ஜொலித்திருந்தது .

எப்பொழுதுமே , இந்த நாளில் அங்கு வருகை புரியும் வாடிக்கையாளர்களின் அலைபேசியை உள்ளே நுழைவதற்கு முன்பே வாங்கி பத்திரப்படுத்தி வைத்துவிடுவார்கள் . அதே போன்று , அழைப்பு விடுத்திருக்கும் பத்திரிகை நண்பர்களுக்கு மட்டுமே அனுமதியும் வழங்கப்பட்டிருக்கும் .

பொது மக்களிடம் தங்களது நிலையை விவரித்துக் கொண்டிருக்க முடியாது.. அதேநேரத்தில் அவர்களை தவிர்க்கவும் இயலாது.. இங்கு , தனிப்பட்ட நேரத்தில் வரும்  தன் தோழிகளுக்கு.. அவருடைய   வாடிக்கையாளர்களால் இடைஞ்சல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக கவனத்துடனே இருப்பார் மயூரி.. அதன் காரணமாகவே .. உள்ளே நுழைவோரின் அலைபேசிகள் நுழை வாயிலிலேயே பத்திரப்படுத்தி வைத்திருக்கப்படும் . எவரேனும் , தங்களுக்கு பிடித்தமானவர்களோடு இணைந்து புகைப்படங்கள் எடுக்க விரும்பினால்.. அவர்களால் வர வைக்கப்பட்டிருக்கும் நபராலுயே எடுக்கப்பட்டு.. அலைபேசியின் வாயிலாகவே அனுப்பியும் வைக்கப்பட்டுவிடும் . மீண்டும் , அதே எண்ணிற்கு அழைத்தால்.. பழுதாகிவிட்டதாக தகவல் வரும் .

ரிச்சர்ட்.. தாமரை என்று கூடி இருந்த இடத்திற்கு வேகமாக நெருங்கி வந்த விக்கியிடம் ,

"வாழ்த்துக்கள் அண்ணா.. வாழ்த்துக்கள்..", என்று மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தவளாய்.. தாமரை அவனது கரங்களை குழுக்க.. எதற்கு என்று தெரியாத போதும் தன்னிச்சையாக ,

" தேங்க்ஸ்..", என்று உதிர்த்து அவளது வலைக்குள் தன்னை அறியாமலேயே வீழ்ந்துவிட்டான்.. எதற்கு என்று காரணம் கேட்க நினைக்கும் பொழுது மயூரி அவனை அழைக்க..

" எக்ஸ்கியூஸ் மீ..", என்று நகர்ந்தும்விட்டான் .

" ஏய் குட்டிமா.. எதுக்கு இப்ப அவனுக்கு வாழ்த்து சொன்ன..", என்று புரியாமல் ரிச்சர்ட் கேட்க..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now